Good Bad Ugly Review: தெறிக்கும் விசில் சத்தம்.. தியேட்டரில் வெறித்தனம் காட்டும் குட் பேட் அக்லி! தமிழ்நாட்டில் சம்பவம்தான்!
Good Bad Ugly Review: அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

good bad ugly review: தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இ்ந்த படம் உருவானது முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
குட் பேட் அக்லி திருவிழா:
படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் குட் பேட் அக்லி படம் இன்று உலகெங்கும் ரிலீசானது. வெளிநாடுகளில் முதல் நாளான நேற்று இரவே குட் பேட் அக்லி படம் ரிலீசானது.
முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான படமாக இந்த படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த காரணத்தால் நேற்று மாலை முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம் தொடங்கியது. தனது மகனுக்காக கேங்ஸ்ட்ராக இருக்கும் ஏகே அனைத்தையும் விட்டுவிட்டு சிறைக்குச் சென்ற நிலையில், மீண்டும் தனது மகனுக்காக கேங்ஸ்டராக திரும்புவதே மையக்கருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் ரசிகர்கள் ஆனந்தம்:
இந்த கதையை முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு ஏற்றது போல, விருந்தாக படைத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். ட்விட்டரில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. அஜித்தின் தொடக்க காட்சி முதல் படத்தின் முதல் பாதி வரை அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இந்த படத்தின் பல காட்சிகளும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
Ithuku mela ena venum🛐💥🔥
— AKracing (@Akraciing) April 10, 2025
We won maaraaa @Adhikravi 👏
TN theatre kili kilinu kiliya porathu uruthi💯🌋🌋🌋🔥💥#GoodBadUgly#GoodBadUglyFDFS
pic.twitter.com/EpzwQksNcv
மேலும், அஜித்தின் முந்தைய ப்ளாக்பஸ்டர் படங்களான வாலி, அமர்க்களம், தீனா, மங்காத்தா, பில்லா என பல படங்களின் ரெஃபரென்ஸ்களும் இந்த படத்தில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் முதல் நாளே திரைப்படம் வெளியாகிவிடும் என்பதால் கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
வீடியோ காலில் ஆதிக்:
ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக ரோகிணி தியேட்டரில் படத்தை பார்க்க வந்த ரசிகர்களிடம் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வீடியோ காலில் பேசினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்குமாருடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். அர்ஜுன்தாஸ் வில்லனாக நடித்துள்ளார்.
Director Advik Video Call AT Rohini 🥳😎😇 sureshchandra sir ♥️#GoodBadUglyFDFS #viddamuyarchi
— THALA ADDICTED (@emo_emokidz) April 9, 2025
#Ajithkumar𓃵 pic.twitter.com/y0wxvIKzaH
மேலும், பிரபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராஃப், சிம்ரன் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்திற்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள் வருவது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ஷன் விருந்து:
அஜித்தின் கடந்த படமான விடாமுயற்சி மென்மையான திரைப்படமாக அமைந்த நிலையில், இந்த படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஆக்ஷன் படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த படத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் முன்பதிவு ஆகியிருப்பதும் படக்குழுவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















