மேலும் அறிய

தீபாவளி வெளியீட்டிற்காக விறுவிறுப்புடன் தயாராகும் சிலம்பரசன் TR ன் 'அரசன்'

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் அரசன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் - எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன் , இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி, கிஷோர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு நிலவரம் 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று, விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன் TR-   பிரியங்கா மோகன் - சமுத்திரக்கனி -  ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோர் கதையின் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையின் புறநகர்  பகுதியான கிழக்கு கடற்கரை சாலை ஒட்டிய கிராமப் பகுதி ஒன்றில் பிரம்மாண்டமான திறந்த வெளி அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அரங்கம்-  வடசென்னையை அப்படியே முழுவதுமாக  ரீகிரியேட் செய்து தத்துரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்திற்காக அமைக்கப்பட்ட 'தாராவி' அரங்கத்தை விட நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும்  இந்த அரங்கத்தை பார்த்தவர்கள் சிலாகித்து பேச  ஆரம்பித்துள்ளனர்.. இந்த அரங்கம் பிரம்மாண்டமான பொருட்செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது..

மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்த அமீர் மற்றும் சந்திராவாக நடித்த ஆண்ட்ரியாவும் கலந்து கொள்கிறார்.‌

தீபாவளி ரிலீஸ் 

இன்னும் மூன்று மாதத்திற்குள் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு பெறும் வகையில் படப்பிடிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ் சினிமாவில் தயாராகி வரும் திரைப்படம் சிலம்பரசன் TR நடிக்கும் 'அரசன்' என்பதும், இப்படத்தின் பிரத்யேக ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது என்பதும், தீபாவளி போன்ற திருவிழா தருணத்தில் 'அரசன்' திரைப்படம் வெளியானால்.. வணிக ரீதியான பெரும் வெற்றியை பெற கூடும் என சிலம்பரசனின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதும் , இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget