மேலும் அறிய

CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகதாது அணை விஷயமாக கர்நாடகாவிற்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பூமி பூஜை அறிவிப்பை வெளியிட்டுள்ள கர்நாடக அரசிற்கு, இந்த விவாகரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எந்தவிதத்திலும் மீறக்கூடாது என அறிவுறுத்துமாறு, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை இப்போது பார்க்கலாம்.

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் எழுதிய கடிதம்

இது குறித்து பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “மாண்பமை பிரதமர் அவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதி ஆணையையும் அப்பட்டமாக மீறும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது நீர்த்தேக்கத்திற்கான 'பூமி பூஜை' நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், மாண்புமிகு கர்நாடக மாநில துணை முதலமைச்சர் இது தொடர்பாக பொது வெளியில் தெரிவித்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்திற்காக காவிரி ஆற்றையே நம்பியிருக்கும் தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளிடையே, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி நதிநீர் பிரச்னை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும் என்றும், இப்பிரச்னைக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேல் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின்னரே தீர்வு காணப்பட்டது என்பது மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் அறிந்ததே என்றும், 16.02.2018 அன்று மாண்பமை உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், மேகதாது திட்டம், காவிரி நடுவர் மன்றம் அனுமதித்த திட்டங்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும், இதனை மேற்கண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரிப் படுகையானது நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை என்பதை கருத்தில் கொண்டு, 50 சதவீத நம்பகத்தன்மை அடிப்படையில் கிடைக்கக்கூடிய நீர் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் கூடுதல் நீரை பயன்படுத்துவதற்கோ அல்லது புதிய பெரிய நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கோ எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதாலும் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தவிர்த்து. காவிரி ஆறு அல்லது அதன் துணை நதிகளின் குறுக்கே வேறு ஏதேனும் புதிய திட்டத்தைத் திட்டமிடுவது, மேற்குறிப்பிட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தலையிடுவதற்குச் சமமானதாகும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் திருத்தப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டிய நீர்வரத்துக்கான மூன்று கூறுகளில் ஒன்றான 'கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து' உருவாகும் நீர்வரத்தைத் தடுப்பதற்கு, கர்நாடக மாநிலம் முயன்று வருவதாகத் தமிழ்நாடு உறுதியாகக் கருதுகிறது என்றும், கர்நாடகா-தமிழ்நாடு எல்லையின் மிக அருகிலேயே, 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட ஒரு புதிய மேகதாது திட்டத்தை முன்மொழிவதன் மூலம், கர்நாடக மாநிலம் இம்முயற்சியை மேற்கொள்வதாகத் தமிழ்நாடு கருதுகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 16.02.2018 தேதியிட்ட தனது தீர்ப்பில், நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேல்பகுதியில் அமைந்துள்ள மாநிலமானது, கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள மாநிலத்திற்குத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத்தை பாதிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்று மாண்பமை உச்சநீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்பளித்துள்ளது என்பதால், கர்நாடக மாநிலம் ஒரு புதிய நீர்த்தேக்கத்தை கட்டுவதற்கு முன்மொழிந்துள்ள இச்செயலானது, மேற்கூறிய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மீதான ஒரு தெளிவான மீறலாகவே அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கர்நாடக மாநிலம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு வரையறைகள் (Terms of Reference ToR) பெற முயன்றபோது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF & CC) வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவானது, 19.07.2019 அன்று நடைபெற்ற தனது கூட்டத்தில், இதில் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல்கள் உள்ளதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒரு இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்து, அக்கோரிக்கையை திருப்பியனுப்பியது என்பதை கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும், மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF & CC) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்வதற்கான ஆய்வு வரையறைகளை (TOR) இதுவரை வழங்கக்கூட இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், எனவே, மேகதாது திட்டப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல கர்நாடக மாநிலம் மேற்கொள்ளும் முயற்சி, மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மட்டுமல்லாமல், தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பை அதன் எழுத்துப்பூர்வ மற்றும் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு இணங்கச் செயல்படுத்தும் கடமை கொண்ட ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும் (MoJS) மற்றும் மத்திய நீர்வள ஆணையமும் (CWC) தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பரிசீலிக்காமலேயே, கர்நாடகாவின் மேகதாது திட்ட முன்மொழிவை ஏற்றுப் பரிசீலித்து வருவது வியப்பளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இச்சூழலில், மேகதாது திட்ட முன்மொழிவின் விரிவான திட்ட அறிக்கையானது (DPR), 05.02.2007 தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதி ஆணைக்கும். 16.02.2018 தேதியிட்ட மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணாக அமைந்திருப்பதால், அத்திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையம் (CWC) ஆகியவற்றில் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும், படுகையில் அமைந்துள்ள பிற மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் எந்தவொரு புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எவ்வகையிலும் மீறக்கூடாது என்றும் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

இதையும் படிங்க: சென்னைல நாளை(27.05.2026) எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?

Advertisement

தலைப்பு செய்திகள்

Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Top 10 News Headlines: மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
மின்வெட்டு உண்மை தான், குக்கரில் வெந்த கஞ்சா, பிசிசிஐ அனுமதி - 11 மணி வரை இன்று
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Kia UpComing SUV: ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
ஹைப்ரிட், 7 சீட்டர், EV - முன்னணி ப்ராண்ட்களுக்கு போட்டியாக 4 புது எஸ்யுவிக்கள் - கியா கார்கள்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ.3,280 குறைந்தது.! 3 நாளில் அதிரடி மாற்றம்- இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Embed widget