மேலும் அறிய

அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

தேர்தல் பிரச்சாரம் சமயத்தில் முதலமைச்சர் விஜய்க்கு குடைச்சல் கொடுத்த அருண் ஐபிஎஸ்-யே லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமித்துள்ளது தவெகவினரை ஷாக் ஆக்கியுள்ளது. அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு கொடுத்துள்ளதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக சொல்கின்றனர்.

திமுக ஆட்சியில் அதிகாரமிக்கவராக திகழ்ந்தவர் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த ஏடிஜிபி அருண். அதே ஆட்சியில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாகவும் பணியாற்றிய அருண் மீது த.வெ.கவினருக்கு எதிராக அப்போது அவர் செயல்பட்டதாக கடுமையான புகார்களை முன்வைக்கத் தொடங்கிருக்கிறார்கள்  அக்கட்சியினர். குறிப்பாக, தேர்தல் நேரத்தில் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி மறுத்தது அப்போதைய காவல் ஆணையராக இருந்த அருண்-தான் என்றும் திமுக மேலிடத்தின் உத்தரவுபடியே அவர் அப்படி செயல்பட்டதாகவும், அவர் திமுக ஆதரவாளர் என்ற முத்திரையையும் அருண் மீது குத்தியது தவெக. 

அதே நேரத்தில், திமுகவிற்கு எதிராக பேசிவந்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மற்றும் அவரது அணியினர் மீது பல வழக்குகளை போட்டு, அவர்களை சிறைக்கு அனுப்பியதில் முக்கிய பங்கு அருணுடையது என்றும் அவருக்கு த.வெ.க. ஆட்சியில் முக்கிய பதவி தரக்கூடாது என்றும் குரல் எழுந்தது. இருந்தாலும் சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்தும் விஜய் முக்கிய காரணங்களுக்காக அருணுக்கு பொறுப்பு கொடுத்துள்ளார்.

அருண் மீது கடும் விமர்சனங்களை த.வெ.க.வினர் முன் வைத்தாலும் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்து, அவர்களை சிறப்பாக பணி செய்ய வைக்கும் திறமை அருணுக்கு உண்டு என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். தவெக ஆட்சியிலும் அருண் போன்ற திறமையான போலீஸ் அதிகாரிகளை சரியாக முதல்வர் விஜய் பயன்படுத்தினால் அது தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தி தரும் என்றும் அதிகாரிகள் வட்டத்தில் இருந்து முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை திமுக மற்றும் அதிமுக என்ற இருபெரும் திராவிட கட்சிகளே எதிர்க்கட்சிகளாக இருக்கும் நிலையில், சிறிய குற்றச்செயல்களை கூட மிகப்பெரிய பிரச்னையாக அவர்கள் உருவாக்கிவிடுவார்கள் என்றும் அதற்கு அருண் போன்ற போலீஸ் அதிகாரிகளை முக்கிய பதவிகளில் பாரப்பட்சம் பார்க்காமல் நியமித்தால், த.வெ.க. ஆட்சிக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அருண் ஐபிஎஸ்-க்கு பொறுப்பு தர வேண்டும் என நெருக்கியதாகவும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் அருண் ஐபிஎஸ்-க்கு புது பொறுப்பு கொடுத்துள்ளதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!
IND vs WI: ஃபயர் காட்டுவாரா கோலி.. வெளுத்து வாங்குவாரா ரோகித்? ஆசையோடு காத்திருக்கும் ரசிகர்கள்!
ABP Nadu Top 10, 24 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
ABP Nadu Top 10, 24 September 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
சிலிண்டர் மானியம் தொடர வேண்டுமா? அக்டோபர் 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்!
சிலிண்டர் மானியம் தொடர வேண்டுமா? அக்டோபர் 1 முதல் ஆதார் பயோமெட்ரிக் கட்டாயம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
Gem Veeramani: டம்மிகளின் டாடியா? வீரமணி வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுப்பது ஏன்? தவெக கேள்வி
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் IPS! கம்பி எண்ணப்போகும் போலீஸ் அதிகாரிகள்?
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
Mahindra Thar OG Variants: மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
மஹிந்திராவின் புதிய தார் OG-யில் எந்த வேரியண்ட் பெஸ்ட்.? விலை, எஞ்சின், அம்சங்களின் முழு விவரம்
Honda QC3 Vs TVS iQube: ஹோண்டா QC3-ஆ.? டிவிஎஸ் ஐக்யூபா.? எந்த EV ஸ்கூட்டர் சிறந்தது.? விலை, ரேஞ்ச், அம்சங்கள் ஒப்பீடு இதோ
ஹோண்டா QC3-ஆ.? டிவிஎஸ் ஐக்யூபா.? எந்த EV ஸ்கூட்டர் சிறந்தது.? விலை, ரேஞ்ச், அம்சங்கள் ஒப்பீடு இதோ
Embed widget