ஆல் ஓவர் தமிழ்நாட்டில் சம்பவம் செய்த அஜித்...குட் பேட் அக்லி வசூல் வெளியிட்ட படக்குழு
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இரண்டு வாரங்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது

குட் பேட் அக்லி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா , அர்ஜூன் தாஸ், சிம்ரன் , யோகிபாபு , பிரபு , பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் மாஸ் படமாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்
குட் பேட் அக்லி இரண்டு வார வசூல்
குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டு வார வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டு வாரங்களில் குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் ரூ 172 கோடி வசூலித்துள்ளது. உலகளவில் இப்படம் 290 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
OFFICIAL !!!! #GoodBadUgly — 172.3 Cr in Tamilnadu Alone 🔥 #Ajithkumar pic.twitter.com/HZrNaPuJ9A
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) April 24, 2025
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதனை ஈடு செய்யும் வகையில் தற்போது குட் பேட் அக்லி படம் இந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அஜித் ரசிகர்களிடையே படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் எப்படியான வரவேற்பை பெறும் என்கிற கேள்வி இருந்தது. அடுத்தடுத்து விடுமுறை இருந்ததாலும் வேறு பெரிய படம் வெளியாகாத காரணத்தினாலும் படத்திற்கு சீரான கூட்டம் இருந்து வந்தது. ஏப்ரல் 24 ஆம் தேதி சுந்தர் சி இயக்கியுள்ள கேங்கர்ஸ் உள்ளிட்ட இன்னும் சில படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் வசூலில் சரிவு இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் 300 திரையரங்குகளுக்கும் மேல் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய டாப் 5 படங்களில் ஒன்றாக குட் பேட் அக்லி இடம்பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது





















