Good Bad Ugly: முதல் நாளே இணையத்தில் லீக் ஆன ‘குட் பேட் அக்லி’ - அஜித் படக்குழு அதிர்ச்சி
Good Bad Ugly Leaked Online: ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் முதல் காட்சி முடிந்த சிறிது நேரத்தில் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியானது.

அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இணையத்தில் வெளியானதால் மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆதிக் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியானது. படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் காலை முதல் திரையரங்குகளில் காத்திருந்து சென்றனர். ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்களுக்கு பாலாபிஷேசம் செய்து அஜித் படத்தை கொண்டாடினர்.
குட் பேட் அக்லி
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தை அவரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோதே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதோடு, இது ஒரு அஜித் ரசிகரின் படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும், அஜித்திற்கு மாஸ் காட்சிகள் ஏதுமில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் படம் நல்லாருக்கு ஆனால், அஜித் படமாக இல்லை என்று தெரிவித்திருந்தனர்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் குட் பேட் அக்லி படம் இன்று (10.04.2025) உலகம் முழுவதும் வெளியானது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது முற்றிலும் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தார்போல இருப்பதாக தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் கொண்டாடி வருகின்றனர். திரைப்படம் வெளியானதில் இருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரசிகர்கள் படம் மாஸாக இருப்பாதாக தெரிவித்துள்ளனர்.
விஜய் வசனம் பேசிய அஜித் குமார்
குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜித் ’நண்பா.. ஐ எம் வெயிட்டிங்’ என்ற வசனத்தை பேசுவார். கத்தி படத்தில் நடிகர் விஜய் பேசும் வெயிட்டிங் என்ற வசனம் மிகவும் பிரபலம். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. விஜய் - அஜித் இருவரும் வசனங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
குட் பேட் அக்லி - இணையத்தில் லீக்
இந்த நிலையில், இப்படம் HD பிரிண்டில் வெளியாகியுள்ளது. முதல் காட்சி முடிந்த சிறிது நேரத்தில் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியானது. மொத்தப்படமும் நல்ல தரத்தில் வாட்ஸ் அப்பில் வெளியானதால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
'Digital piracy' -க்கு எதிர்ப்பு
திரைப்படங்கள் வெளியாகும்போது அதை திரையரங்கிலோ சென்றோ அல்லது வெளியிடப்படும் ஓ.டி.டி, தளத்திலோ அவற்றை காண்பது சட்டப்பூர்வமானது. திரைப்படத் திருட்டு மற்றும் எந்தவொரு கலை ஊடகத்தையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இதை ABP நாடு கடுமையாக கண்டிக்கிறது. திரைப்படம் வெளியாகியதும் அவற்றை தரமான ப்ரிண்ட்ரில் இணையத்தில் ரிலீஸ் செய்வது, அதை டவுன்லோட் செய்து பார்ப்பது இரண்டும் சட்டவிரோதமானது. இதுபோன்ற செயல்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள், படைப்பாளர்கள் நடிகர்களை மட்மல்ல, ஒரு திரைப்படம் உருவாவதற்கு பின்னால் கடிமாக உழைக்கும் எண்ணற்ற படக்குழு உறுப்பினர்களையும் பாதிக்கிறது. திரையரங்குகளில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவைகளில் திரைப்படங்களைச் சட்டப்பூர்வமாகப் பார்ப்பதன் மூலம் திரைத் துறை, படைப்பாளர்கள், கலை சார்ந்தவைகள் ஆகியற்றை ஆதரிக்கும்முறை. மேலும், அதன் வளர்ச்சிக்கும் உதவும். சினிமாவை சரியான முறையில் - சட்டபூர்வமாகவும் பொறுப்புடனும் கொண்டாடுவோம்.





















