அஜித்தின் ’Good Bad Ugly ' எப்படி இருக்கு?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரையரங்கில் வெளியாகியுள்ளது.ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அர்ஜூன் தாஸ் , த்ரிஷா , பிரசன்னா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருகின்றனர்.
முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக உருவாகி இருக்கிறது குட் பேட் அக்லி ஸ்லோ மோஷனில் நடந்து வருவது . சண்டைக்காட்சிகள் என ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்து
அஜித் என்கிற ஒற்றை மனிதரைச் சுற்றியே மொத்த படமும் நடக்கிறது சமூக வலைதளத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கதை என்பது பெரிய அளவில் இல்லையென்றாலும் அஜித் படமாக சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல Entertainment படம் என்று ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கதைக்கு பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை அதே போல் இடைவேளைக் காட்சியில் விஜய் படத்தின் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. ரசிகர்கள் கொண்டாடும்படி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
OMG ஆத்விக் ரவிச்சந்திரன். நல்ல திரைக்கதை. அஜித் ரசிகராக இப்படி ஒரு படம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.” என்று ஒருவர் தெரிவிக்கிறார்.
”“GoodBadUgly திரைப்படம் ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படம். அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள சிறப்பான திரைப்படம்.” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.