Big Boss Season 9: எல்லை மீறிய கம்மூ-பாரு.. ”வெளியே கிளம்புங்க’ ரெட் கார்ட்டை தூக்கிய விஜய் சேதுபதி
சக போட்டியாளரை இப்படி செய்தது மட்டுமில்லாமல் தாங்கள் செய்தது தான் சரி என்று இருவரும் கூச்சமே இல்லாமல் பேசினர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தகாத முறையில் மோசமாக நடந்து கொண்ட கம்ருதின் மற்றும் விஜே பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர்
சர்ச்சையில் பிக் பாஸ்
பிக்பாஸ் சீசன் 9 சர்ச்சைகளுக்கு பஞ்சமின்றி, கிட்டத்தட்ட கடைசி நாட்களை நெருங்கி வருகிறது. குறிப்பாக சின்னத்திரை நடிகர் கம்ருதின் மற்றும் விஜே பார்வதி ஆகியோர் ஆரம்பம் முதலே பல சர்ச்சையான சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர், கம் சுழிக்கும் வகையிலான பல செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான டிக்கெட் டூ ஃபைனலே சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
எல்லை மீறிய கம்ரூதின்
பிக்பாஸ் வீட்டில் காருக்குள் யார் நீண்ட நேரம் இருக்கிறார்களோ அவர்களுக்கே அதிக புள்ளிகள் என்ற சவால் அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஜாலியாகத் தொடங்கிய இந்தப் போட்டி, கம்ருதின் சக போட்டியாளரான சாண்ட்ராவைத் தேவையின்றி வம்புக்கு இழுத்ததால் விபரீதமாக மாறியது. கம்ருதினின் பேச்சுக்குச் சாண்ட்ரா பதிலடி கொடுக்க, கம்ருதினுடன் விஜே பார்வதியும் கைகோர்த்துக்கொண்டு சாண்ட்ராவை மிக மோசமான வார்த்தைகளால் அநாகரீகமாக விமர்சிக்கத் தொடங்கினர்.
ஒரு கட்டத்தில் வார்த்தைத் தடிப்புகள் எல்லை மீறி, இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை வலுக்கட்டாயமாகப் பிடித்து உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளினர். கீழே விழுந்த சாண்ட்ராவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டபோதும், மனிதாபிமானமே இன்றி "அவர் நடிக்கிறார்" என்று கூறி பார்வதியும் கம்ருதினும் ஏளனம் செய்தனர். சக போட்டியாளர்கள் தடுத்தும் கேட்காமல் அவர்கள் நடந்துகொண்ட விதம், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. இந்தத் தனிமனித தாக்குதலும், அநாகரீகமான அணுமுறையும் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது.
ரெட் கார்டு
சக போட்டியாளரை இப்படி செய்தது மட்டுமில்லாமல் தாங்கள் செய்தது தான் சரி என்று இருவரும் கூச்சமே இல்லாமல் பேசினர். இன்று வெளியான வீக் எண்ட் புரோமோவில் காட்டமாக பேசிய விஜய் சேதுபதி உனக்கு பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்படி பேசுறீங்களே அது பார்ப்பவர்களுக்கு நெருடலாக இருக்காதா... உங்க அக்கா இதை பார்த்து தம்பி நீ நல்லா பண்ணுனப்பானா சொல்லுவாங்க. பாரு வீட்டுக்கு போன உடனே பாராட்டு விழா தான் நடத்தனும். ஒரு பொண்ணை எட்டி உதைச்சதை நான் பார்த்து ரசிச்சேன் என அவங்க அம்மா பாராட்டுவாங்க என சொல்லி நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க என ரெட் கார்ட்டை நீக்க ஒட்டுமொத்த அரங்கமும் இதற்கு கைத்தட்டினர்






















