திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை தேத்தாம்பட்டி பிரிவு அருகே வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காரில் இருந்து இறங்கி பாதிக்கப்பட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை தேத்தாம்பட்டி பிரிவு அருகே வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் தொழிற்சாலையில் பணிமுடித்து வீடு திரும்பிய பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வேனில் 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் அவ்வழியாக விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். விபத்து நடந்ததை அறிந்த அவர் படுகாயமடைந்த பெண்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, விராலிமலை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று, போதிய மருத்துவரின்றி முதலுதவிக்காககாத்திருந்தவர்களுக்கு,‘மருத்துவர்’ என்ற நிலையில் பணியில் இருந்த மருத்துவருடன் இணைந்து முதலுதவி சிகிச்சையினை அளித்தார்.எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக சி.டி ஸ்கேன் எடுத்து மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.மேலும்,காயமடைந்தோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என வும் தெரிவித்தார். விபத்தை கண்டு உதவியதோடு தானே மருத்துவர் என்ற முறையில் சிகிச்சையும் அளித்த முன்னாள் அமைச்சரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.