மேலும் அறிய

AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் 64 ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

AK 64

அஜித்தின் 63 ஆவது படமாக உருவான குட் பேட் அக்லி கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது . ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி த்ரிஷா , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு பிரபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.   இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான படமாக அமைந்தாலும் வெகுஜன சினிமா ரசிகர்கள் என்னமோ படத்தைப் பார்த்து தலைவலி வந்து திரும்பியது தான் மிச்சம்.

அடிப்படையாக ஒரு ஒன்லைனை வைத்துக் கொண்டு திரைக்கதையில் எந்த வித மெனக்கெடலும் இல்லாமல் வெறும் ஹைப் கொடுத்தே ஓடிய படம் குட் பேட் அக்லி. படத்திற்கு ஏற்றதுபோல மூளைக்கு சுத்தமாக வேலை கொடுக்க விரும்பாத ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தார்கள். அடுத்தடுத்து அஜித்தின் முந்தைய பட ரெஃபரன்ஸ் , பழைய பாடல்கள் , காதை கிழிக்கும் பின்னணி இசை , என இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடியதைப் பார்த்து இதுதான் சினிமாவின் எதிர்காலமா என்று விவாதிக்க தொடங்கிவிட்டார்கள்.  குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் 64 ஆவது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவலைக் கேட்ட சினிமா ரசிகர்கள் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

கார் ரேஸிங்கில் அஜித் குமார்

குட் பேட் அக்லி படத்திற்கு பின் நடிகர் அஜித் குமார் சிறிது காலம் சினிமாவில் இருந்து இடைவேளை எடுத்திருக்கிறார். தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் GT4 சீரிஸ் கார் பந்தையங்களில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். பல வருடங்களுக்கு பின் மீண்டும் ரேஸிங் பக்கம் அஜித் திரும்பியிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அஜித்திற்கு உலகம் முழுவதிலும் கிடைத்துள்ள வரவேற்பு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதும் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. அஜித் வழிநடத்தும் அஜித் குமார் ரேஸிங் அணிக்கும் சர்வதேச அளவில் பெரிய கவனம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் வரை அஜித் முழுக்க முழுக்க கார் பந்தையத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தேர்தல் முடியும் வரை டிவியில் விஜய் படங்களுக்கு தடையா? - புயலை கிளப்பிய கடிதம்!
TVK Vijay: தேர்தல் முடியும் வரை டிவியில் விஜய் படங்களுக்கு தடையா? - புயலை கிளப்பிய கடிதம்!
என் மகனுக்காக மண்டியிட்டு பிரார்த்தனை செய்த சூர்யா..எமோஷ்னலான கருணாஸ்
என் மகனுக்காக மண்டியிட்டு பிரார்த்தனை செய்த சூர்யா..எமோஷ்னலான கருணாஸ்
தனுஷ் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் தாயார் காலமானார்!
தனுஷ் பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் தாயார் காலமானார்!
Monalisa Bhosle: அத்துமீறிய இயக்குநர்.. பாலியல் சீண்டல்.. கும்பமேளா மோனாலிசாவுக்கு நேர்ந்த கொடூரம்!
Monalisa Bhosle: அத்துமீறிய இயக்குநர்.. பாலியல் சீண்டல்.. கும்பமேளா மோனாலிசாவுக்கு நேர்ந்த கொடூரம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN udhaya suriyan symbol : 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டி.! கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? ஸ்டாலின் விளக்கம்
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
Ananya Birla: RCB ரசிகர்கள் கொண்டாடும் அனன்யா பிர்லா! யார் இந்த அழகி?
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
TVK Candidate List: நாளை மறுநாள் தவெக வேட்பாளர் பட்டியல்; நேரடியாக அறிமுகம் செய்யும் விஜய், சைலண்ட் மோடில் சம்பவமா?
IPL 2026: பிரமாண்ட வெற்றினா இதுதான்..! CSKவிற்கு இடமில்லை - RCBக்கு வந்த சோதனை - யார் டாப்?
IPL 2026: பிரமாண்ட வெற்றினா இதுதான்..! CSKவிற்கு இடமில்லை - RCBக்கு வந்த சோதனை - யார் டாப்?
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
LPG Gas Booking: என்னாது? கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் புதிய கட்டுப்பாடுகள்? விளக்கமளித்த மத்திய அரசு
MK Stalin Vs Modi :
"கோவிட் காலத்தைப் போல" மோடியின் பேச்சு..! பீதிக்கு உள்ளான பொதுமக்கள்- கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Iran War US 15 Point Plan: இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
இந்தா.. கிளம்பிட்டார்ல; ஈரான் போரை முடிக்க ட்ரம்ப் போட்ட 15 அம்ச திட்டம்; ஒர்க் அவுட் ஆகுமா.?
AIADMK Candidate List: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! யார் யார் எந்த தொகுதியில் போட்டி.? இதோ முழு லிஸ்ட்
Embed widget