ராசி இல்லனு தெரிஞ்சும் ரிஸ்க் எடுத்த அஜித்; பிப்ரவரியில் ஃபிளாப்பான அஜித்தின் படங்கள் இத்தனையா?
கடவுள் பக்தி கொண்ட அஜித், தன்னுடைய படங்களுக்கு சில சென்டிமென்டை தொடர்ந்து ஃபாலோ பண்ணி வருகிறார். அப்படி அவருக்கு பிப்ரவரி மாதம் செட் ஆகாது என தெரிந்தும் விடாமுயற்சியை மூலம் எடுத்துள்ளார்.

அஜித் பற்றி பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவரின், சில செண்டிமெண்ட் பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் சாய் பாபா மீது கொண்ட பக்தியின் காரணமாக, அஜித் தன்னுடைய ஒவ்வொரு படங்களையும், வியாழ கிழமைகளில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் தன்னுடைய படங்கள் வின் பண்ண வி செண்டிமெண்ட்டை ஃபாலோ பண்ணுகிறார். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் அஜித் தற்போது, பிப்ரவரி மாதத்தில் பல படங்கள் வந்து தோல்வியை சந்தித்த நிலையில் ரிஸ்க் எடுக்கும் விதமாக விடாமுயற்சியை ரிலீஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி பிப்ரவரி 6ஆம் தேதி அன்று
வெளியானது. ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். காதல் திருமணம் செய்து 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்து வாழ முடிவு செய்த பின்னர் நீண்ட தூர பயணம் செய்கிறார்கள். அப்போது மனைவி கடத்தப்படுகிறார். இதையடுத்து எப்படி தன்னுடைய மனைவியை கண்டுபிடிக்கிறார், கடைசியில் இருவரும் பிரிந்தார்களா இல்லை ஒன்று சேர்ந்தார்களா என்ற கதையோடு விடாமுயற்சி நேற்று வெளியானது.
உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் முதல் நாளில், இந்தியளவில் மட்டும் ரூ.22 கோடி வசூலித்த நிலையில் உலகளவில் மொத்தமாக ரூ.30 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இது மற்ற படங்களின் வசூல் நிலவரங்களை விட ரொம்பவே குறைவு. என்னதான் சோலோவாக வெளியாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களை சந்திக்க தொடங்கியிருக்கிறது. இது போன்று இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் வெளியான வந்த எந்தப் படமும் அஜித்திற்கு பெரியளவில் கை கொடுக்கவில்லை.
அந்த பட்டியலில் 1994 ஆம் ஆண்டு பிப் 4ஆம் தேதி அரவிந்த்சாமியுடன் அஜித் நடித்து வெளியான பாசமலர்கள் தோல்வியை தழுவியது. மேலும், 1999 ஆம் ஆண்டு பிப்.5ல் சுந்தர் சி இயக்கத்தில் அஜித், மாளவிகா நடிப்பில் வந்த உன்னைத் தேடி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு பிப் 19ஆம் தேதி திரைக்கு வந்த முகவரி பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. 1996 ஆம் ஆண்டு பிப் 18 ஆம் தேதி திரைக்கு வந்த கல்லூரி வாசல் படுதோல்வியை சந்தித்தது. 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ல் திரைக்கு வந்த அசல் பெரியளவில் தோல்வியை கொடுத்தது. மேலும், 2005 ஆம் ஆண்டு பிப் 11ல் வெளியான ஜீ படம் அட்ட பிளாப் படமாக அமைந்தது.
இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு பிப் 5ஆம் தேதி அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஹிட் கொடுத்தது. 2021 ஆம் ஆண்டு அஜித் நடித்து பிப் 24ல் வெளியான வலிமை விமர்சன ரீதியாக தோல்வியை கொடுத்தது. இந்த வரிசையில் இப்போது விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தோல்வி படமா, ஹிட் படமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

