Ajayante Randam Moshanam: ‛எல்லாம் மூன்று...’ பான் இந்தியாவை குறிவைக்கும் டோவினோ தாமஸ்!
நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” துவங்கியது.
நடிகர் டோவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடிக்கும் பான் இந்திய திரைப்படம் “அஜயந்தே ரண்டம் மோஷனம்” துவங்கியது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் லால் இயக்குகிறார். மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இந்தப்படத்தில் மணியன், அஜயன், குஞ்சிகேலு மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோ தாமஸ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
View this post on Instagram
பான்-இந்திய திரைப்படமாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3டியில் வெளியாகவுள்ளது. கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகியகள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மேலும் இந்தப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை UGM Productions தயாரிக்கிறது. Magic Frames நிறுவனம் தயாரிப்பில் இணைந்துள்ளது. இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் களரி எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் என்பதால் நடிகர் டோவினோ பிரத்யேகமாக களரி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்