Ajanta Ellora International Film Festival: சினிமா ரசிகர்களே தயாராகுங்க.. ஒரு ட்ரிப்பையும் போடுங்க.. அஜந்தா எல்லோரா திரைப்பட விழா ஜனவரி 3ல் தொடங்குது..
இந்தியாவில் பல மொழி மக்கள் வாழ்ந்தாலும், பிற மொழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் திரைப்படங்களை கொண்டாடுபவர்கள் அதிகம்.
அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 3 ஆம் தேதி என தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சினிமாவையும், இந்திய மக்களையும் என்றைக்கும் பிரித்து பார்க்கவே முடியாது. இங்கு பல மொழி மக்கள் வாழ்ந்தாலும், பிற மொழி தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் திரைப்படங்களை கொண்டாடுபவர்கள் அதிகம். அந்த வகையில் வாரம் தோறும் ரிலீசாகும் படங்களை தவிர்த்து திரைப்பட விழாக்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுபவர்கள். காரணம் இங்கு அதிகமாக உலக அளவில் வெளியான அல்லது உருவான திரைப்படங்கள் திரையிடப்படும்.
அப்படி இந்தியாவை பொறுத்தவரை கோவா சர்வதேச திரைப்பட விழா, சென்னை சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்டவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் ஒன்பதாவது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா மகாராஷ்ட்ரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. ஜனவரி 3 முதல் 7ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவின் தொடக்க விழா எம்ஜிஎம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ருக்மணி ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் முதுபெரும் பாடலாசிரியர்-திரைக்கதை எழுத்தாளர் ஜாவேத் அக்தருக்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த திரைப்பட விழாவில் படங்கள், குறும்படங்கள் தவிர்த்து மிகப்பெரிய திரை ஆளுமைகளுடன் உரையாடல் நிகழ்வும், திரைப்படம் தொடர்பான வகுப்புகளும் நடைபெறவுள்ளது.
இந்திய திரைப்பட விழாவின் நடுவர் குழுவிற்கு மூத்த நடிகரும் இயக்குனருமான த்ரிதிமான் சாட்டர்ஜி தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவில் ஒளிப்பதிவாளர் டிமோ போபோவ், இயக்குனர் நச்சிகேத் பட்வர்தன், திரைப்பட விமர்சகர் ரஷ்மி துரைசாமி, ஒளிப்பதிவாளர் ஹரி நாயர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெறும் படக்குழுவுக்கு கோல்டன் கைலாசா விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த நடிகர், நடிகை மற்றும் ஸ்கிரிப்ட் பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களும் விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.
இந்த திரைப்பட விழாவில் fallen leaves, the old oak anotamy as a fall, three sad tigers, Lucia, love the magician, carmen, privacy உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள https://aifilmfest.in/ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.