Aishwarya Rajinikanth:“தூக்கிப்போட மனசு வரல”...பக்கம் பக்கமாக கதை எழுதி வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...
பிரிவுக்குப் பின் பேசாமல் இருந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் முதல் முறையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த மகன் யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாக பொறுப்பேற்ற நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டனர்.
![Aishwarya Rajinikanth:“தூக்கிப்போட மனசு வரல”...பக்கம் பக்கமாக கதை எழுதி வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... Aishwarya Rajinikanth tweet about The evolution of a script is true magic Aishwarya Rajinikanth:“தூக்கிப்போட மனசு வரல”...பக்கம் பக்கமாக கதை எழுதி வைத்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/36b0aaca0c66bb1694738d01536526801662203154996224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கதை எழுதுவது குறித்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா , தனது காதல் கணவர் தனுஷை கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வை ராஜா வை என்ற படத்தை இயக்கியிருந்தார்.அதன்பின் பெரிய அளவில் படங்களில் கவனம் செலுத்ததாத அவர், விவாகரத்துக்குப் பின் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
மேலும் பிரிவுக்குப் பின் பேசாமல் இருந்து வந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் முதல் முறையாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மூத்த மகன் யாத்ரா தனுஷ் பள்ளி விளையாட்டு கேப்டனாக பொறுப்பேற்ற நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
அதேசமயம் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு மற்றவர்களுக்கு மோட்டிவேஷன் செய்திகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. அதில் ஸ்பைரல் போடப்பட்ட பல கோப்புகள் மேலே அவர் கதை எழுதும் பேப்பர்கள் இருப்பது போல ஒரு படம் இடம் பெற்றிருந்தது. அதனுடன், பேனா காகிதத்தை தொடும் நேரத்திலிருந்து கதையின் பரிணாமம் என்பது முதலாவது எழுதுவது, 2வது அது தட்டச்சு செய்யத் தயாராக இருப்பதாக நீங்கள் நினைக்கும் போது சேர்த்தல் மற்றும் மாற்றங்கள், நீங்கள் என்று நினைக்கிறீர்கள் என்பதை இணைப்பது ஆகும்.
View this post on Instagram
காலப்போக்கில் நீங்கள் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும்போது ஒரு தாளைக் கூட தூக்கி எறியத் தோன்றவில்லை.. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைப் படிக்கும்போது அதனை புதிதாக தோன்றுகிறது. அதனை அப்டேட் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உண்மையில் நாங்களும் அப்படி ஏதுவும் எழுதியிருந்தால் அவ்வளவு எளிதில் தூக்கிப்போட மனசு வராது. எழுத்தாளர்களின் எண்ணம் அப்படி என பதிவிட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)