(Source: ECI/ABP News/ABP Majha)
Dhruva Natchathiram: ரிலீசுக்கு முன்னரே எழுந்த சிக்கல்.. துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா காட்சிகள் நீக்கமா?
விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விலகிய நடிகர் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைய, படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ஸ்டைல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் “ஒரு மனம்” பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதன்பின்னர் கிட்டதட்ட 4 ஆண்டுகள் கடந்த போதிலும் படத்தின் அப்டேட் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனால் படம் ரிலீசாகுமா என்ற கேள்வியும் எழுந்தது.
இப்படியான நிலையில் துருவ நட்சத்திரம் படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது. பின்னணி இசைக்கான பணியை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது மேற்கொண்டு வருகிறார். இதனிடையே துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து His Name Is John என்ற இரண்டாவது பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தில் இருந்து ஒரு மனம் பாடல் வெளியாகியிருந்தது. அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது அந்த வீடியோ யூட்யூப் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. டீசரில் ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஹிஸ் நேம் இஸ் ஜான் பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் இடம் பெறவில்லை.
இதனை வைத்து தான் அவரின் காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் படக்குழு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் என்ன நடக்கப் போகிறது என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.