நந்தினியா..குந்தவையா.. பொன்னியின் செல்வனின் அழகு மாது யார்?
அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும், ரசிக்க வைக்கும் பொன்னியின் செல்வனின் ஸ்வீட் லுக் வில்லி
பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் மும்மரமாக நடந்து வரும் வேலையில், படத்திலிருந்து பல ஸ்டில்களும், வியக்கத்தக்க ப்ரோமோ வீடியோவும் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படம் ஒருபுறம் ட்ரெண்டாக, மறுபுறம் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன் வைரல் புயலாக இணையத்தில் சுழன்று வருகிறார்.நந்தினி வேடத்தில் உள்ள அவரின் புகைப்படங்களை பார்க்க ஏதோ மெழுகை உருக்கி பெண் சிலையை செய்தது போல் உள்ளது. பட்டு ரகமான ஆடைகள், கதாப்பாத்திரத்திற்கேற்ற சிகை அலங்காரம்,
குறை காண முடியாத ஒப்பனை என அழகு தேவதையாய் ஐஸ் திரையில் மின்னவுள்ளார் என்பது உறுதி ஆகிவிட்டது.
View this post on Instagram
இவரின் பேரழகை மக்கள் ரசித்து வருவதோடு, குந்தவையாக நடித்த த்ரிஷாவின் லுக்கையும் ஐஸ்வர்யாவின் லுக்கையும் ஒப்பிட்டு வருகின்றனர். டீசர் வெளியான போது, நந்தினியும் குந்தவையும் முகத்திற்கு நேராக சந்திக்கும் காட்சி ஒன்று இடம் பெற்று இருக்கும். அதிலே, இருவரின் அழகில் சொக்கி போனார்கள் பல இளசுகள். இளசுகள் மட்டுமல்லாமல், குழந்தை முதல் பெரியவர்கள் வரை நந்தினியின் தோற்றத்தை பாராட்டினர். அவ்வளவு என்ன, பெண்களுமே அந்த அழகில் மயங்கினார்கள்.
பொன்னியின் செல்வன் நாவல் படிக்காதவர்களுக்கு ஒரு ஸ்பாய்லர் அலெர்ட்....
படத்தில் பொல்லாத வில்லியே நந்தினிதான். எதிர்மறை கதாப்பாத்திரங்களுக்கு பொதுவாக கொஞ்சம் பயங்கரமான மேக்-அப் போடுவார்கள். அப்படி பார்த்தால் நந்தினியோ, ஒரு வில்லி அப்போது அவரை ஏன் அழகாக காட்ட வேண்டும் என்று கேள்வி எழலாம். நாவலின் கதை அம்சத்தின் படி, சோழ நகரத்தில் உள்ள பெண்களில் அழகிய தோற்றம் கொண்டவர் நந்தினி. இவரின் அழகு வலையில் பார்த்தவுடன் சிக்கிய ஆடவர் பலர் உண்டு. கதையில் உள்ள பழுவேட்டரையர், கந்தமாறன், பார்த்திபேந்திர பல்லவன் ஆகிய சிலர் இதில் அடங்குவர். ஆக அதற்குதான் அவருக்கு அப்படி ஒரு கெட்-அப். ஆனால், வந்தியத்தேவன் ஒருவனே, நந்தினியின் சுய ரூபம் அறிந்து, அவளின் அழகிற்கு மயங்காமல் அவளை விட்டு சற்று விலகியே இருப்பான். நந்தினியின் கதாப்பாத்திரத்தை ஒரு வரியில் விளக்க வேண்டும் என்றால், அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்று சொல்லலாம்.
Shots from #PonniyinSelvan1 #karthi #ChiyaanVikram #JayamRavi #AishwaryaLekshmi #AishwaryaRaiBachchan #TrishaKrishnan #ManiRatnam #ARRahman pic.twitter.com/Xjnj3wA9Mt
— its_yuva (@AYvashree) September 22, 2022
அழகு பதுமைகளின் போட்டோவையும் சேர்த்து, படத்தின் ஷூடிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பல போட்டோக்கள் பகிரப்பட்டு வருகிறது. ப்ரோமோஷனின் அடுத்த கட்டமாக, படக்குழுவினர் ஹைதராபாத் செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.