ஜல்லிக்கட்டை கொண்டாடும் வெற்றிமாறனின் படம்... ஆஹா தமிழில் வெளியாகிறது!
Aha Tamil: வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஆர்.சுதர்சன் படத்தொகுப்பில், சந்தோஷ் நாராயணன் இசை மேற்பார்வையில் இது உருவாகியுள்ளது.

இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் நடிகர் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும் விடுதலை ஆகிய படங்களை இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்தது. வாடிவாசல் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், விடுதலை படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. கொடைக்கானலில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்ததற்கான கொண்டாட்டத்தை படக்குழு பகிர்ந்தது.
விடுதலை படத்தின் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் பெற்ற நிலையில், தியேட்டரில் தான் அந்த திரைப்படம் வெளியாகும் என்பது உறுதியானது. இந்நிலையில், நேற்று திடீரென ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் இயக்குனர் வெற்றிமாறனின் பெரிய அப்டேட் ஒன்று வரவிருப்பதாக அறிவித்தது.
View this post on Instagram
அனைவரும் அது விடுதலை அல்லது வாடிவாசல் படம் தொடர்பான அறிவிப்பாக தான் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், இன்று அந்த சஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்த்திருக்கிறது ஆஹா. நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் நிர்வகிக்கும் ஆஹா ஓடிடி தளம், சமீபத்தில் தமிழில் வந்தது. பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் ஆகியவற்றை வாங்கி வெளியிட்டு வரும் ஆஹா ஓடிடி தளம், வெற்றி மாறன் தயாரித்த மண்வாசனை கொண்ட ஒரு முழுநீள வெப்சீரியஸை வெளியிட உள்ளது.
View this post on Instagram
ஆம், வெற்றிமாறன் தயாரித்து, வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஆர்.சுதர்சன் படத்தொகுப்பில், சந்தோஷ் நாராயணன் இசை மேற்பார்வையில் உருவாகியிருக்கும் வெப்சீரிஸை, அண்ணனுக்கு ஜே படத்தை இயக்கிய ல.ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவரது அண்ணனுக்கு ஜே படத்தை ஏற்கனவே வெற்றிமாறன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடித்தக்கது.
பேட்டைக்காளி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சிரீஸ், வரும் தீபாவளி முதல் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆஹா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் படம் போலவே அனைத்து காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ள நிலையில், அறிவிப்பின் தொடக்கத்தில் இது வாடிவாசல் படம் தான் என அனைவரும் நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, பேட்டைக்காளி வெப்சீரிஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

