AGS Productions: சொத்து வரியை நிலுவையில் வைத்த விஜய் பட தயாரிப்பு நிறுவனம்; பட்டியலில் சேர்த்த சென்னை மாநகராட்சி!
சென்னையில் ரூ. 5 முதல் ரூ.10 லட்சம் வரை சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களான கல்பாத்தி சகோதரர்களின் பெயர்கள், சொத்துவரி செலுத்தாதவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தமிழ் திரையுலகின் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில், ‘திருட்டு பயலே’ படத்தை தயாரித்த இந்த நிறுவனம்,சந்தோஷ் சுப்பிரமணியம், மாசிலாமணி, மதராசப்பட்டினம், இரும்புகோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, எங்கேயும் காதல், யுத்தம் செய், அவன் இவன், வேலூர் மாவட்டம், மாற்றான், நவீன சரஸ்வதி சபதம், தெனாலி ராமன், இரும்பு குதிரை, அனேகன், வை ராஜா வை, தனி ஒருவன், கவண், திருட்டு பயலே 2, பிகில், நாய் சேகர் ஆகிய படங்களை தயாரித்தது.
View this post on Instagram
தங்களிடம் வரும் கதையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் ஏ.ஜி.எஸ் பெரும்பாலும் பெரிய ஹீரோக்களின் படத்தையோ, பெரிய டைரக்டரின் படத்தையோதான் தயாரிப்பர். இவர்கள் சமீப காலத்தில் தயாரித்த படங்கள், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், நல்ல கதை அமைப்பை கொண்ட லவ் டுடே படத்தை கம்மியான பட்ஜெட்டில் தயாரித்தது.
இந்த படம் தமிழில் நல்ல வெற்றிபெற்ற பின், ஏ.ஜி.எஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா புரடக்ஷன்ஸ் உடன் கைக்கோர்த்து தெலுங்கில் டப்பிங் செய்து தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் அந்தப்படத்தை வெளியிட்டது; தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்ற லவ் டுடே அங்கும் நல்ல வசூலை ஈட்டியது;
சென்னையில் ரூ. 5 முதல் ரூ.10 லட்சம் வரை சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் #Chennai #chennaicorporation pic.twitter.com/dWGpanHp5d
— Kannan Jeevanantham (@Im_kannanj) December 27, 2022
தற்போது, சென்னையில் ரூ. 5 முதல் ரூ.10 லட்சம் வரை சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கல்பாத்தி சகோதரர்களான, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ். சுரேஷ், கல்பாத்தி எஸ். கணேஷ் ஆகியோரின் பெயர் உள்ளது. தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கான சொத்து வரியை இவர்கள் செலுத்தாததால், இவர்களின் சொத்தின் மீது 7,97,550 ரூபாய் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.