சோசியல் மீடியா பக்கம் எட்டி பார்த்த லோகேஷ்..கொலைவெறியோடு காத்திருந்த ரசிகர்கள்...மறுபடியும் ஜூட்
கூலி படம் ரிலீஸைத் தொடர்ந்து சிறு இடைவேளைக்குப் பின் சமூக வலைதளத்திற்கு திரும்பியுள்ள லோகேஷ் கனகராஜை நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான கூலி திரைப்படம் வசூலில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. முதல் 4 நாட்களில் ரூ 404 கோடி வசூலித்த கூலி அடுத்தடுத்த நாட்களில் இறக்கம் கண்டது. இப்படத்தின் குறைகளை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் இரவுப் பகலாக விமர்சித்தும் ட்ரோல் செய்தும் தற்போது கொஞ்சம் அமைதியாகியுள்ளார்கள். இப்படியான நிலையில் கூலி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் சமூக வலைதளம் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார்.
மீண்டும் சமூக வலைதளத்திற்கு திரும்பிய லோகேஷ் கனகராஜ்
கூலி படத்தின் முதல் நாள் மூன்று காட்சிகளையும் ரசிகர்களுடன் பார்த்த லோகேஷ் சோசியல் மீடியாவில் இருந்து சிறிய இடைவேளை எடுத்துக் கொண்டார். படத்திற்கு வரும் விமர்சனங்களை தவிர்க்கவே அவர் இந்த இடைவேளை எடுத்துக் கொண்டார் . லியோ படத்தின் போதும் அவர் இதே முறையை பின்பற்றினார். சிறிய இடைவேளைக்குப் பின் திரும்பி வந்து படத்தைப் பற்றி விமர்சனங்களுக்கு பதிலளித்தார். லியோ படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சி பரவலாக விமர்சனத்திற்கு உள்ளானது குறித்து அவர் விளக்கமளித்தார் . ஆனால் அவர் கொடுத்த விளக்கம் படத்தைப் பற்றிய ரசிகர்களிடன் அபிப்பிராயத்தில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
நேற்று ரவி மோகன் தயாரித்து நடித்துள்ள ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வெளியானது . இந்த ப்ரோமோவை லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தார். உடனே நெட்டிசன்கள் அவரை டேக் செய்து தாக்கத் தொடங்கியுள்ளார்கள். லியோ படத்திற்கு கொடுத்ததைப் போல் கூலி படத்தின் விமர்சனங்களுக்கு லோகேஷ் கனகராஜ் என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
#BroCode Promo 🤗🤗https://t.co/UiyVcsqY3f
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 27, 2025
I'm sure this film will do wonders for you ya @karthikyogidir ❤️
Congratulations @iam_RaviMohan brother on your debut production and wishing the entire team of #BroCode💥😄





















