Aditi Shankar : கேரளாவை கலக்கிய கஞ்சா பூவு கண்கள்… அதிதி சங்கரின் சமீபத்திய க்லிம்ஸ் !!
நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் தற்போது விருமன் படத்தை ப்ரோமோஷன் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக அவர்கள் தற்போது கேரளா சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதிதி ஷங்கர் பிரபல இயக்குனர் எஸ்.ஷங்கரின் மகள் ஆவார். சமிபத்தில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அதிதி. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, அதில் செம்ம கியூட்டாக பாவாடை தாவணி அழகில் மின்னினார். இந்த ஒற்றை புகைப்படத்திலேயே... ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.
இதை தொடர்ந்து அவ்வப்போது இந்த படத்தில் நடிக்கும், இவரது கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியானது. இந்நிலையில் நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் ஆகியோர் தற்போது விருமன் படத்தை ப்ரோமோஷன் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக அவர்கள் தற்போது கேரளா சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியிடப்பட்ட விருமன் ட்ரெய்லரும், பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
🔥🔥🔥🔥
— Aditi Shankar (@AditiShankarofl) August 10, 2022
The Day is almost here!
Excited, happy and very eagerly looking forward to the 12th of August!#Viruman #VirumanVaaranDa #VirumanFromAug12
Book your tickets now!@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @rajsekarpandian @2D_ENTPVTLTD @sonymusicsouth pic.twitter.com/SqZGZqiP1H
'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தை பிரோமோட் செய்யும் விதமாக நடிகர் கார்த்தி, நடிகை அதிதி ஆகியோர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.