Watch Video VJ Manimegalai: இவங்கதான் எங்க பைக்கை திருடியிருக்காங்க.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட மணிமேகலை..!
நடிகையும் தொகுப்பாளினியுமான மணிமேகலை தனது பைக் திருடபோனது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
நடிகையும் தொகுப்பாளினியுமான மணிமேகலை தனது பைக் திருடுபோனது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்த அவர், “ எங்களுக்கு சொந்தமான பைக் திருடப்பட்டிருக்கிறது. பைக்கை நாங்கள் அசோக் நகருக்கு அருகில் உள்ள எங்களது நண்பரின் வீட்டருகே நிறுத்தி இருந்தோம்.
View this post on Instagram
கல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆசையா வாங்குன முதல் பைக். ரொம்ப கஷ்டமா இருக்கு. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ..!” என்று குறிப்பிட்டதோடு, பைக்கை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் அவர் இது தொடர்பான சிசிடிவி காட்சியை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
மணிமேகலையை நமக்கெல்லாம் சன்டிவி வாயிலாகத் தான் தெரியும். சன் மியூஸிக்கில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த அவர் தனது காதலாரன ஹுசைனை வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். அவர்களின் காதல் திருமணம் ஊடகங்களின் முக்கியச் செய்தியாகக்கூட இடம் பெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மணிமேகலை விஜய் டிவிக்கு மாறினார்.
வந்தாரை வாழவைக்கும் விஜய் டிவி மிஸ்டர், அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிக்களில் மணிமேகலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த நகைச்சுவை ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. சீசன் 2வும் எதிர் பார்த்ததை விட பெரிய ஹிட் ஆனது. அதனைத்தொடர்ந்து வந்த சீசன் 3 யிலும் மணிமேகலைக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், அதிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.
View this post on Instagram
தொலைக்காட்சியில் தனது பணியைத் தாண்டியும் மணிமேகலை எப்போதுமே தனது ரசிகர்களை எங்கேஜிங்காக வைத்திருக்க சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார். யூடியூப் ஃபேஸ்புக்கில் வீடியோ, இன்ஸ்டாவில் போட்டோக்கள் என ஒவ்வொரு நாளும் அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறார். இவை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.