Vinodhini: மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்ன தெரியுமா? - பதிலடி கொடுத்த வினோதினி!
வினோதினி வைத்தியநாதன் கடந்தாண்டு ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன என்று கேட்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்கட்சியின் உறுப்பினராக நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வினோதினி வைத்தியநாதன். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த அவர் கடந்தாண்டு ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வினோதினி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்தார்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அக்கட்சியின் நிலைப்பாடு இன்னும் 2 நாட்களில் தெரிய வரும் என மக்கள் நீதி மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வினோதினி வைத்தியநாதன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு -
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) February 19, 2024
சில கட்சிகளின் கொள்கைகளை film one-line போலச் சொல்லிவிட்டு, பின் எங்கள் கட்சியின் கொள்கையைச்சொல்கிறேன். சார்ந்தோர் எந்தெந்த கட்சியென்று நீங்களே கண்டறிவீராக. க்ளூவெல்லாம் கிடையாது.
1.…
அதில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு - சில கட்சிகளின் கொள்கைகளை film one-line போலச் சொல்லிவிட்டு, பின் எங்கள் கட்சியின் கொள்கையைச்சொல்கிறேன். சார்ந்தோர் எந்தெந்த கட்சியென்று நீங்களே கண்டறிவீராக. க்ளூவெல்லாம் கிடையாது.
1. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பார்ப்பானை அடி.
2. பாம்பையும் சசிகலாவையும் பார்த்தால், சசிகலாவை அடி.
3. பாம்பையும் முஸ்லிமையும் பார்த்தால், முஸ்லிமை அடி.
4. பாம்பையும் இடைச்சாதியினரையும் பார்த்தால், இடைச்சாதியினரை அடி.
5. பாம்பையும் தலித்தையும் பார்த்தால், தலித்தை அடி.
6. பாம்பையும் தெலுங்கனையும் பார்த்தால், தெலுங்கனை அடி.
7. பாம்பையும் கார்ப்பரேட்காரனையும் பார்த்தால், கார்ப்பரேட்காரனை அடி.
இவ்வாறாக, ஏதோ ஒரு எதிரியை முன்னிலைப்படுத்தியே கட்சிகள் இங்கு வளர்கின்றன. மக்கள் நலன் மறைந்து வெறுப்பே எஞ்சுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் வெறுப்பு தான் மேலோங்கியிருகிறது.
கடந்த 70 ஆண்டுகளில். நிற்க. மநீம - பாம்பையும் மனிதனையும் பார்த்தால், பாம்பை அடிக்காமல், பிடித்து ஸ்னேக் பார்க்கிற்கோ, காப்பகத்திற்கோ அனுப்பிவிட்டு, மனிதனைக்காப்பாற்று. சாதி, மதம், பொருளாதார பேதமென பிரிக்காமல், மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும், கோட்பாட்டில் மட்டுமே வேற்றுமை காணும் பண்பைத் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் எங்கள் தலைவர் கமல்ஹாசன். அவ்வழியே நாம்” என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.