மேலும் அறிய

Vanitha Vijayakumar: 'தமிழ் சினிமாவின் ஷாருக்கான் இவர்தான்' - நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது.

அநீதி படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

வெயில், அங்காடித்தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலனின் அடுத்தப் படைப்பாக ‘அநீதி’ படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஜூலை 21 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனிடையே அநீதி படக்குழுவினர் பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், நான் என்னுடைய கம்பேக்கில் நிறைய படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். ஆனால் அநீதி படம் முதல் படமாக உலகளவில் ரிலீஸ் ஆகுது. இவ்வளவு பெரிய இயக்குநர் எனக்கு போன் செய்து, ‘நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். கதை எழுதும் போதும் இந்த கேரக்டரை நீங்க பண்ணா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி’ என சொன்னார். உடனே நான் சரி என சொன்னேன். இப்படி எளிமையாக ஒரு பிரபலத்தோட பேசுற இயக்குநர் ஒரு சிலர் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். 

Vanitha Vijayakumar: 'தமிழ் சினிமாவின் ஷாருக்கான் இவர்தான்' - நடிகை வனிதா விஜயகுமார் சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார்.அர்ஜூன் தாஸூக்கே நான் வில்லன்  என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் க்யூட்டெஸ்ட் பெர்சன். அவரோட வாய்ஸ் அழகாக உள்ளது.

கிளைமேக்ஸ் காட்சியை பார்த்து விட்டு, எனக்கு ஓ மை காட் .. எனக்கு ஷாரூக்கான் நியாபகம் தான் வந்தது. அர்ஜூன் தாஸ் தமிழ் சினிமாவின் ஷாரூக்கான்.   மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. 'அநீதி' படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா  விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். 'அநீதி' திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget