Ponniyin Selvan Teaser Launch: “நான் மணி சாரோட குந்தவை..அதுபோதும் எனக்கு” .. மேடையில் நெகிழ்ந்த த்ரிஷா
பொன்னியின் செல்வனின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என த்ரிஷா தெரிவித்தார்.
பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வனின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என டீசர் வெளியிட்டு விழாவில் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தநிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய படத்தில் குந்தவையாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் படம் என தெரிவித்தார். மேலும் பொன்னியின் செல்வனின் பெருமையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Our Kundavai @trishtrashers ❤️#PS1 #PonniyinSelvanTeaser pic.twitter.com/csKnZaJcs4
— Madras Talkies (@MadrasTalkies_) July 8, 2022
புதிதாக நடிக்க வருபவர்களாக இருந்தாலும் சரி, பெரிய நடிகராக இருந்தாலும் சரி மணி சார் படத்தில் நடிக்க விரும்புவார்கள். அந்த வகையில் “நான் மணி சாரோட குந்தவை..அதுபோதும் எனக்கு” என த்ரிஷா நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
பான் இந்தியா கான்செப்ட்டை மணி சார் ரோஜா படத்திலேயே செய்து விட்டார். அந்த வகையில் பல படங்களை நாம் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பேன் இந்தியா படம் பொன்னியின் செல்வன் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம் எனவும் த்ரிஷா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்