மைசூர் சாண்டல் சோப்பிற்காக பல கோடி செலவு.. தமன்னாவுக்கு எத்தனை கோடி தெரியுமா?
ஒரு விளம்பரத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் பல கோடியை தாண்டியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியத்தை குறிக்கிறது மைசூர் சாண்டல் சோப். நாள் தோறும் 12 லட்சம் சோப்புகள் தயாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் இதன் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. இந்தியாவின் அடையாளத்தில் ஒன்றாகவும் மைசூர் சாண்டல் சோப் திகழ்கிறது.
இரண்டு ஆண்டுக்கு ஒப்பந்தம்
இது 100 சதவீதம் சந்தன எண்ணெயை உற்பத்தி செய்யும் உலகின் ஒரே சோப்பு என்று கூறப்படுகிறது. இவை 1916 முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் எம்.எஸ். தோனி சோப் பிராண்டின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார். அவைரத் தொடர்ந்து தீபிகா படுகோன், ராஷ்மிகா ஆகியோர் உள்ளனர். தற்போது நடிகை தமன்னா விளம்பர முகங்களாக இணைந்துள்ளார். நடிகை தமன்னா மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
60 கோடி செலவு செய்த கர்நாடக அரசு
இந்நிலையில், நடிகை தமன்னா பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த கர்நாடாக சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ சுனில் குமார் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்தின் செலவு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, தமன்னாவுக்கு ரூ.6.27 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நடிகை ஐஷானி ஷெட்டிக்கு ரூ.15 லட்சம், மேலும் சமூக வலைத்தள விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.62.87 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின்படி இந்த தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.





















