Sonam Kapoor Pregnancy: கர்ப்பத்தை வித்தியாசமாகக் கூறிய பாலிவுட் நடிகை.. ரியாக்ட் செய்த நடிகை சமந்தா...!
திருமணம் மற்றும் சினிமா என இரண்டையும் சமாளித்து வலம் வந்துக்கொண்டிருக்கும நடிகை சோனம், குழந்தையின் வரவேற்பிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
![Sonam Kapoor Pregnancy: கர்ப்பத்தை வித்தியாசமாகக் கூறிய பாலிவுட் நடிகை.. ரியாக்ட் செய்த நடிகை சமந்தா...! Actress Sonam Kapoor opens up her Pregnancy through social media Check here in Details Sonam Kapoor Pregnancy: கர்ப்பத்தை வித்தியாசமாகக் கூறிய பாலிவுட் நடிகை.. ரியாக்ட் செய்த நடிகை சமந்தா...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/3f7e63ff54df0fa5a8ace123a43d2d5b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நான்கு கைகள் உள்ளது எங்களால் முடிந்தவரை உன்னை உயர்த்துவோம் என்று புகைப்படத்தோடு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை சோனம் கபூர்.
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வந்த அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகள் தான் சோனம் கபூர். வாரிசு நடிகையான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சாபரியா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவருக்கு பிலிம்பேர் நடிகைக்கான சிறந்த அறிமுக விருது கிடைத்தது. இதனையடுத்து பேட் மேன், சஞ்சு, ரான்ஜானா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படி பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்த சோனம் கபூர், தொழிலதிபரான ஆனந்த அகுஜா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமண வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை என இரண்டையும் சமாளித்து வலம் வந்துக்கொண்டிருக்கும நடிகை சோனம், குழந்தையின் வரவேற்பிற்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தனது கர்ப்பத்தை அழகாகவும் வித்தியாசமாகவும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். கர்ப்பமான வயிறுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளதோடு “கர்ப்ப காலம் என்பது அழகானது தான். ஆனால் அது கடினமானதும் கூட என்பதை ஒருவரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள். இருந்தப்போதும் இது சுகமானது” என மனம் திறந்து தெரிவித்துள்ளார். மேலும் முதல் 3 மாதங்கள் மிகவும் சவாலானது எனவும் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
மேலும், இங்கு நான்கு கைகள் உள்ளது. எங்களால் இயன்றவரை உன்னை உயர்த்துவோம் என்றும், இரண்டு இதயங்கள் உன்னுடைய ஒவ்வோர் அடியிலும் அது ஒன்றாய் துடிக்கும். மேலும் உன் மீது அன்பையும், ஆதரவையும் பொழிவதற்காக அழகிய குடும்பம் ஒன்று உள்ளதாக தெரிவித்து தனது கணவர் மடியில் அழகாகப்படுத்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவைப்பார்த்த நடிகைகள் சமந்தா மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோர் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவந்துள்ளனர். இதோடு வித்தியாசமான முறையில் கர்ப்பத்தைப் பதிவிட்டுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று ரசிர்கள் லைக்குளையும் கமெண்ட்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)