மேலும் அறிய

'வாக்குவாதம், சண்டை.. ஆனாலும் நேசிப்போம்' - பிரசன்னாவிற்கு சினேகாவின் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் பிரசன்னாவின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அவரது மனைவியும், நடிகையுமான சினேகா வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரசன்னா. இவர் சுசி கணேசன் இயக்கத்தில் 5 ஸ்டார் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். 2009ம் ஆண்டு நடிகை சினேகாவுடன் இணைந்து அச்சமுண்டு, அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்போது, சினேகாவும், பிரசன்னாவும் காதலித்தனர். இதையடுத்து, 2012ம் ஆண்டு நடிகை சினேகாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கோலிவுட்டின் சிறந்த தம்பதிகளாக வலம் வருகின்றனர்.

நடிகர் பிரசன்னாவின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 28-ந் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில், இன்று அவரது 39வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வாக்குவாதம், சண்டை.. ஆனாலும் நேசிப்போம்' - பிரசன்னாவிற்கு சினேகாவின் பிறந்தநாள் வாழ்த்து

பிரசன்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மனைவியும், நடிகையுமான சினேகா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “ இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என் அன்பே! நீங்கள் மிகவும் சரியான நபராக இல்லாமல் இருக்கலாம். நீங்கள் சரியான விஷயங்களை செய்யாமல் இருக்கலாம். நாம் இருவரும் வாக்குவாதம் செய்து சண்டையிடகூடச் செய்யலாம். ஆனால், ஒரு நாளின் இறுதியில் நம் இருவருக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் தேவை என்பது என்று எனக்கு தெரியும். நான் உன்னை எப்போதும் நேசிப்பேன் என்பதை நினைவுபடுத்துகிறேன். என்னுடைய தாதாவிற்கு வாழ்த்துக்கள்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வாக்குவாதம், சண்டை.. ஆனாலும் நேசிப்போம்' - பிரசன்னாவிற்கு சினேகாவின் பிறந்தநாள் வாழ்த்து

நடிகை சினேகா விஜய், அஜித், கமல், சூர்யா, பிரசாந்த், தனுஷ் என தமிழில் பல்வேறு முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 90களின் பிற்பகுதியிலும், 2000-10 காலகட்டங்களிலும் சிம்ரன், ஜோதிகா, திரிஷா, அசின் போன்ற முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக சினேகா வலம்வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசன்னா- சினேகா தம்பதியினருக்கு 4 வயதில் விகான் என்ற மகன் உள்ளார். மேலும், இவர்களுக்கு கடந்தாண்டு ஜனவரியில் ஆத்யந்தா என்ற பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசன்னா தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். பிரசன்னா கடைசியாக இயக்குனர் கார்த்திக் நரேனின் ப்ராஜெக்ட் அக்னி என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகை சினேகா கடைசியாக தனுஷ் நடித்த பட்டாஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் இணைந்து அச்சமுண்டு, அச்சமுண்டு படம் மட்டுமின்றி கோவா படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடிகை சினேகா தொகுத்து வழங்கியபோது நடிகர் பிரசன்னா சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ளார்.

Vadivelu News: தடை நீங்கியது மகிழ்ச்சி.. இது எனக்கு மறுபிறவி.. வடிவேலு நெகிழ்ச்சி

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget