Actress Sneha: மிகுந்த மன உளைச்சல்.. தடுமாறிய சினேகா.. சரியான நேரத்தில் கைகொடுத்த சேரன்!
ஆட்டோகிராப் படத்தின் குழுவை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தைப் பற்றி நிறைய பேசி விட்டார்கள். 21 ஆண்டுகளுக்குப் பின் படம் ரீ-ரிலீஸாக உள்ளது.

ஜென்ஸி தலைமுறையினர் வித்யாசமாக காதலிக்கின்றனர் என ஆட்டோகிராப் படக்குழுவினர் மீண்டும் சந்தித்த நிகழ்ச்சியில் நடிகை சினேகா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சேரன், இயக்கி நடித்து 2004ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆட்டோகிராப். இந்த படத்தில் சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு, பெஞ்சமின், ராஜேஷ் என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த ஆட்டோகிராப் படம் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் நவம்பர் 14ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை சினேகா, “ ஆட்டோகிராப் படத்தின் குழுவை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தைப் பற்றி நிறைய பேசி விட்டார்கள். 21 ஆண்டுகளுக்குப் பின் படம் ரீ-ரிலீஸாக உள்ளது. மீண்டும் இப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். ட்ரெய்லர் பார்க்கும்போது எங்களை மீண்டும் அந்த இடத்திற்கே கொண்டு சேர்த்துள்ளது. என்னுடைய அப்பாவிடம் படம் மீண்டும் வெளியாவது பற்றி தெரிவித்தேன். அப்படியா என்னை படம் பார்க்க தியேட்டர் கூட்டி போறீயா என கேட்டார். நான் பார்க்க வேண்டும் என அவர் கூறியது போல இந்த படம் எல்லாரையும் இணைக்கக்கூடியதாக இருக்கும்.
நான் இந்த மேடையில் சேரனிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த படம் என்ன உங்களுக்கு பாதித்தது?, அப்படி எத்தனை காதல் உங்களுக்கு இருந்தது என அறிய நினைக்கிறேன். அந்த லிஸ்ட் நிறைய இருக்கும் என நினைக்கிறேன். ஆட்டோகிராப் படம் பண்ணும் போது எனக்கு மிகப்பெரிய அளவில் மன உளைச்சல் தனிப்பட்ட முறையில் இருந்தது. அதனை கண்டறிந்த ஒரு நபர் என்றால் அது சேரன் தான்.
ஆட்டோகிராப் படத்தின் ஒவ்வொரு பூக்களுமே பாடம் ஷூட்டிங்கின்போது நாம் மிகவும் மன கஷ்டத்தில் இருந்தேன். யாருக்குமே அது தெரியாது. வெளியில் சிரித்தபடி இருப்பேன். அந்த பாடல் பதிவின்போது நான் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். அப்போது சேரனுக்கு என்ன தோன்றியது என தெரியவில்லை. நேராக என்னிடம் வந்து என்ன உனக்கு பிரச்னை என கேட்டார்.
நான் ஒன்னுமில்லையேபா என கூற, எதோ ஒரு பிரச்னையில் இருக்கிறன்னு எனக்கு புரியுது, எதுவாக இருந்தாலும் சரியாகும் என தெரிவித்தார். அன்றைக்கு தொடங்கிய எங்களுடைய நட்பு இன்று வரை தொடர்கிறது. சினிமாதுறையில் என்னுடைய மிகச்சிறந்த நண்பர் சேரன் என்பதை மார்தட்டி சொல்ல முடியும். இந்த படம் பார்த்து விட்டு ஆணும் பெண்ணும் நட்பாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கு உதாரணமாக நாங்கள் இருக்கிறோம்.
இந்த படத்தை ரிலீஸ் செய்ய அவ்வளவு கஷ்டப்பட்டார். எனக்கு நான் நடித்தில் மிகவும் பிடித்த படம் ஆட்டோகிராப் தான். ஒவ்வொரு பூக்களுமே பாடலில் அவ்வளவு முக பாவனைகள் சொல்லி கொடுத்தார். உங்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி.இப்போதெல்லாம் நிறைய காதல் வந்து விட்டது. ஜென்ஸி தலைமுறையினர் வித்யாசமாக காதலிக்கின்றனர். ஆனால் காதல் என்றால் என்ன என்பதை இப்படத்தில் சேரன் காட்டியிருக்கிறார் என கூறினார்.





















