Vijay : 20 ஆண்டுகளுக்கு பின் ஜோடியாகும் சிம்ரன்.. வில்லனாக பாபி தியோல்.. அதிரடி கிளப்பும் தளபதி 69..
Thalapathy 69 : நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படத்தில் நடிகை சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தளபதி 69
விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. எச். வினோத் இயக்கும் இப்படத்தை பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. தளபதி 69 படத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜயுடன் சிம்ரன் ஜோடி சேர இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 ஆண்டுகளுக்கு பிறகு விஜயுடன் இணையும் சிம்ரன்..
இப்படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ விஜய்க்கு தங்கையாக நடிக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் படத்தில் வில்லனாகவும் சமந்தா ஒரு நாயகியாக நடிக்க இருக்கிறார்கள். சிம்ரன் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் த்ரிஷா இருவரும் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும் , பிரியமானவளே , உதயா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.
மேலும் விஜயின் யூத் படத்தில் இருவரும் இணைந்து நடனமாடிய 'ஆள்தோட்ட பூபதி' பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தற்போது கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து திரையில் தோன்ற இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயுடன் வசீகரா படத்தில் நடித்த சினேகா சமீபத்தில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்திருந்தது ரசிகர்களை கவர்ந்த நிலையில் மீண்டும் ஒரு கிளாசிக் கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
#Thalapathy69
— Abhishek CH (@AbhishekCH9) September 13, 2024
-KVN Productions
-Aniruddh
-Sathyan Sooriyan (dop)
-Mamitha Baiju
-Samantha & Simran
Announcement coming out tomorrow.#GOAT #TheGreatestOfAllTime @actorvijay pic.twitter.com/O2krnaxu6p
உணர்ச்சி வசப்படும் விஜய் ரசிகர்கள்
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருந்து வரும் விஜய் தற்போது தனது திரைவாழ்க்கையின் கடைசி கட்டத்திற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார். விஜயை சின்ன வயதில் இருந்து திரையில் பார்த்து கொண்டாடி வந்த அவரது ரசிகர்களுக்கு இது மிகவும் உணர்ச்சிவசமான தருணமாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் தோனியை வழியனுப்பி வைப்பது போல சினிமாவில் விஜயை வழி அனுப்பி வைக்கும்படியான ரீல்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்
மேலும் படிக்க : Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

