Jawan : ஜவான் படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்.. என்னை மோசமாக நடத்துனாங்க.. குமுறிய நடிகர்
ஜவான் படப்பிடிப்பின்போது தன்னை படக்குழுவினர் தரக்குறைவாக நடத்தியதாக அப்படத்தில் நடித்த விராஜ் கெலானி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜவான்
அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜவான். ஷாருக் கான் , தீபிகா படுகோன் , விஜய் சேதுபதி , நயன்தாரா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்தார். ஜவான் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் படமாகி பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூல் செய்தது. இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஜவான் அடுத்தபடியாக ஜப்பான் நாட்டில் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் ஜவான் படத்தில் நடித்த நடிகர் விராஜ் கெலானி படக்குழு மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
விராஜ் கெலானி
சமூக வலைதளங்களில் நகைச்சுவையான வீடியோக்களை வெளியீட்டு பிரபலமானவர் விராஜ் கெலானி. அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் இவர் காவல் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஜவான் படம் தனக்கு ஒரு மிக மோசமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார் ' ஷாருக் கான் , சஞ்சய் தத் மாதிரியான நடிகர்கள் படத்தில் இருக்கும் போது உங்களை யாரும் மதிப்பதில்லை. "இங்க வந்து நில்லு அங்க போ" என்று நான் என்னை நடத்தினார்கள். ஒரு க்ளோஸ் அப் காட்சியின் போது என் கையில் துப்பாக்கி இருந்தது. திடீரென்று ஒரு வைட் ஷாட் வைத்தார்கள். நான் என்னிடம் துப்பாக்கி இல்லை என்று சொன்னேன். உங்களுக்கு துப்பாக்கி வரும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு துப்பாக்கி கொடுக்கவில்லை.
கடும் வெயிலில் 10 நாட்கள் நான் நடித்து கொடுத்தேன். ஆனால் படத்தில் நான் முதல் நாளில் நடித்த காட்சியை மட்டுமே பயன்படுத்தி இருந்தார்கள். படத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் போல் நான் வந்து போவதால் என் நண்பர்கள் நிறையபேர் ஜவான் படத்தைப் பார்க்கவில்லை" என அவர் தெரிவித்துள்ளார்
சல்மான் கான் படத்தை இயக்கும் அட்லீ
ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லீ சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Thalapathy 69: விஜய் ரசிகர்களே ரெடியா? இன்று மாலை வரப்போகுது தளபதி 69 அப்டேட் - என்னவா இருக்கும்?