Watch Video : அதிரவைக்கும் வேட்டையன் நடிகை... விரலில் ஃபுட்பாலை சுழலவிடும் மஞ்சு வாரியர் வீடியோ வைரல்
Manju Warrier : நடிகை மஞ்சு வாரியர் விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
மஞ்சு வாரியர்
தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். நடிகை என்பதை கடந்து இவர் ஒரு குச்சிப்புடி நடனக் கலைஞரும் கூட. தனது திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த மஞ்சு வாரியர் மீண்டும் 2015 ஆண்டு முதல் ஆக்டிவாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். பின் துணிவு , தற்போது விடுதலை மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Rajinism is inbuilt in everyone ✨️❤️
— Achilles (@Searching4ligh1) September 12, 2024
What a perfect pair for #Thalaivar in Vettaiyan @ManjuWarrier4 Excited for this combo 😍 #Vettaiyan #Manasilaayo #Coolie #Jailer #SuperstarRajinikanth #Rajinikanth pic.twitter.com/RinmYGz7qy
அசுரன் படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளா மஞ்சு வாரியர். சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலில் மஞ்சு வாரியர் டான்ஸ் மூவ்ஸ் சமூக வலைதளத்தில் வைரலாகின. தற்போது விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அவரது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனது ஒற்றை விரலில் ஃபுட்பாலை கீழே விழாமல் அவர் சுழலவிடுகிறார். தேர்ந்த ஃபுட்பால் வீரர்கள் அல்லது பயிற்சி உடையவர்கள் மட்டுமே இப்படி செய்யமுடியும் என்கிற போது மஞ்சு வாரியர் அசால்ட்டாக இதை செய்துகாட்டியிருக்கிறார்.
வேட்டையன்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர் , ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது . பேட்ட , தர்பார் , ஜெயிலர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது