Shruti Haasan Health: ஊதி பெருசாக்குறாங்க.. நல்லாத்தான் இருக்கேன்.. உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ஸ்ருதிஹாசன்
சில நாட்களுக்கு முன்னதாக தான் பிசிஓஎஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்த ஸ்ருதிஹாசன், தான் நன்றாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பிசிஓஎஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்த ஸ்ருதிஹாசன், தான் தற்போது நன்றாக இருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
இது குறித்து பேசியிருக்கும் ஸ்ருதிஹாசன், “ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறேன். இந்த நாட்கள் எனக்கு மகிழ்ச்சியானதாக இருக்கிறது. நான் சில நாட்களுக்கு முன்னர் எனக்கு இருக்கும் பிசிஓஎஸ் பிரச்னை குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தேன். நிச்சயம் இது சவாலானது. ஆனால் அதற்காக நான் நன்றாக இல்லை, ஏதோ தீவிர சிகிச்சையில் இருக்கிறேன் என்பது பொருள் அல்ல. நான் நன்றாக இருக்கிறேன். சில மீடியாக்கள் நான் எழுதியதை படிக்காமலேயே பிரச்னையை பெரிதாக காண்பிக்கின்றனர். நான் மருத்துவமனையில் இருப்பதாக கூறுகின்றனர். அது உண்மை இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால், பாதிக்கப்பட்டிருந்த ஸ்ருதிஹாசன் பதிவிட்ட பதிவில்“ நான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். வளர்சிதை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்வது உண்மையில் கடினமான போராட்டம் என்பது பெண்ணுக்குத் தெரியும். ஆனால் இதை நான் போராட்டமாக பார்க்கவில்லை. மாறாக எனது உடலின் இயற்கையான நிகழ்வு என்பதை புரிந்து கொண்டு அதை ஏற்க தயாராகி விட்டேன்.
View this post on Instagram
எனது உடல் முடிந்த மட்டும் சிறப்பாக செயல்படுகிறது. சரியாக சாப்பிடுவதற்காக, நன்றாக தூங்குவதற்காக, முறையாக வொர்க் அவுட் செய்வதற்காக அதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்னுடைய உடல் தற்போது ஒழுங்காக இல்லைதான். ஆனால் என்னுடைய உள்ளம் உறுதியாக சந்தோஷமாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடலில் ஓடட்டும்.” என்று பதிவிட்டு இருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

