போலி ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட்...சின்னத்திரை பிரபலம் ஷர்மிலா தாப்பா மீது வழக்கு
போலி ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் அப்ளை செய்ததால் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகையாக அறியப்பட்ட ஷர்மிளா தாப்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ஷர்மிளா தாப்பா மீது வழக்கு
சின்னத்திறை தொலைககாட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ஷர்மிளா தாப்பா. இவர் நேபாளை பூர்வீகமாக கொண்டவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர்த்து அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த நடன கலைஞரை திருமணம் செய்துகொண்டார். ஷர்மிளா தாப்பா சமீபத்தில் இந்திய குடியுரிமை வேண்டி வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது இவரது ஆவணங்களை சோதித்து பார்த்த அதிகாரிகள் ஷர்மிளாவிடம் ஏற்கனவே இந்திய பாஸ்போர்ட் இருப்பதை தெரிந்துகொண்டார்கள். இந்தியரல்லாத ஷர்மிளா எப்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார் என்கிற விசாரணையில் அவர் போலி ஆவணங்களை சமர்பித்து இந்த பாஸ்போர் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது
போலி ஆவணங்கள் சமர்பித்து பாஸ்போர்ட்
2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய பாஸ்போட் வைத்துக் கொண்டு ஷர்மிளா சென்னை அன்னா நகரில் வாழ்ந்து வந்துள்ளார். இப்படியான நிலையில் நிரந்தர குடியுரிமை கேட்டு அவரது விண்ணப்பத்தில் தான் வியாசர்பாடியில் அவர் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஷர்மிளா பெரம்பூரில் இருந்து வருவதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த ஷர்மிலா இந்திய பாஸ்போர்ட் வாங்க போலியான ரேஷன் கார்ட் மற்றும் ஆதார் காட்ட் ஆவணங்களை கொடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு பின் ஷர்மிளா சட்ட விரோதமாக எவ்வாறு இருந்தார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா தாப்பா மீது சென்னை குற்றப் பிரிவு காவல் துறையில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் சார்பாக புகாரளிக்கப்பட்டது. 3 பிரிவுகளின் கீழ் ஷர்மிளா தாப்பா மீது சென்னை மத்திய குற்ற பிரிவு போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர் போலி பாஸ்போர்ட் எடுப்பதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யார் என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என பாஸ்




















