மாதவன், நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் - ஓடிடி ரீலீஸ்!
டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இது. மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கிரிக்கெட் பற்றிய கதை என்பதால் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரபல பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
டெஸ்ட் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மாதவன் - நயன்தாரா ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ட்ரெய்லர் பார்த்த பலரும் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல சினிமா நட்சத்திரங்கள் நடித்திருப்பது, கிரிக்கெட் பற்றிய திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டை பற்றியதாக இருந்தாலும் குடும்ப திரைப்படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகிறது.