யாரும் நடிக்க வரல.. கவர்ச்சி காட்ட தான் வர்றாங்க.. நடிகைகளை விளாசிய ஷர்மிளா!
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் என சொல்வது மிகப்பெரிய உண்மை. நாங்கள் எல்லாம் தமிழ் நடிகைகள் தான் என நடிகை ஷர்மிளா கூறியுள்ளார்.

தற்போதைய சினிமாவில் நடிகைகள் யாரும் நடிப்புக்காக வரவில்லை, கவர்ச்சி காட்டவே வருகிறார்கள் என நடிகை ஷர்மிளா கடுமையாக விமர்சித்துள்ளார்.
செலஸ்டியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மலையாளத்தில் ரகு ராம் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை சைனு சவக்கெடன் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு சுதீர் சி சக்கநாட்டு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்திற்கு சாய் பாலன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்களான ராதா ரவி, ஷர்மிளா, சம்பத் ராம் என பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் ரகு ராம் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகை ஷர்மிளாவிடம், “இப்ப வர நடிகைகள் எல்லாம் கிளாமரை அடிப்படையாக கொண்டு தான் நடிக்க வருகிறார்கள். எதை வச்சு அப்படி சொல்றீங்க, யாரை மனதில் வைத்து அப்படி சொல்றீங்க?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அந்த காலத்தில் சினிமாவில் நடிக்க வரும்போது நான், தேவயானி, சுவலட்சுமி போன்றோர் ஒரு ஜானரை தேர்வு செய்து தான் வந்தோம். ஆனால் இன்றைக்கு அந்த கிளாமர் தான் ஜானராகவே உள்ளது. சில ஹீரோயின்கள் தவிர்த்து பெரும்பாலான ஹீரோயின்கள் கவர்ச்சி தாராளமாக காட்டுகிறார்கள். ஒரு படத்தில் ஹோம்லியாக வந்தால் இன்னொரு படத்தில் அதற்கு எதிராக கிளாமர் பண்ணுகிறார்கள். அழகிப்போட்டி தான் நடக்குதே தவிர, நடிப்புக்கு போட்டி நடக்கவில்லை.
View this post on Instagram
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் என சொல்வது மிகப்பெரிய உண்மை. நாங்கள் எல்லாம் தமிழ் நடிகைகள் தான். இங்கு நினைத்தால் நிறைய படம் எங்களை ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் மலையாளத்தில் இருந்து தான் எங்களை அதிகமாக படம் நடிக்க கேட்டு அணுகுகிறார்கள். விமான டிக்கெட், ஹோட்டல் அறை என சகல வசதிகளும் செய்து தருகிறார்கள். சென்னையில் ஷூட்டிங் நடந்தால் கூட எங்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். அது என்ன மாதிரியான பேஷன் என தெரியவில்லை.
தமிழ் சினிமாவுக்கு மலையாளம், பாலிவுட்டில் இருந்து ஹீரோயின்களை கொண்டு வருகிறார்கள். நான் உட்பட தமிழ் ஹீரோயின்கள் ஒன்றிரண்டு பேர் தான் முன்னுக்கு வந்துள்ளோம். ஆனால் இங்கு நிறைய வட இந்தியா, மலையாளத்தைச் சேர்ந்த நடிகைகள் தான் அதிகம் உள்ளனர்” என ஷர்மிளா தெரிவித்துள்ளார்.





















