டிரஸ் மாத்துறப்போ கதவை தட்டாமல் உள்ளே வந்தார்...இட்லி கடை பட நடிகை கொடுத்த ஷாக்
கேரவனில் உடை மாற்றும் போது தெலுங்கு பட இயக்குநர் கதவை தட்டாமல் உள்ளே வந்ததாக நடிகை ஷாலினி பாண்டே அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்

ஷாலினி பாண்டே
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவருக்கும் முதல் தென் இந்திய படமே பெரிய வரவேற்பைக் கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தமிழில் ஜீவா நடித்த கொரில்லா , 100 % காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில காலமால தென் இந்திய படங்களில் நடிக்காமல் இருந்த ஷாலினி தற்போது தனுஷ் நடித்துள்ள இட்லி கடை படத்தில் நடித்துள்ளார்.
கதவை தட்டாமல் உள்ளே வந்த இயக்குநர்
ஷாலினி பாண்டே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். இதில் தான் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வந்ததாகவும் அப்போது கேரவனில் ஆடை மாற்றும் போது படத்தின் இயக்குநர் கதவை தட்டாமல் உள்ளே வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு அப்போது 22 வயதுதான் இருந்தும் கோபத்தில் தான் இயக்குநரை வெளியே போகச் சொல்லி கத்தியதாக ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பிரபல இயக்குநர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
SHOCKING
— Arun Vijay (@AVinthehousee) April 1, 2025
Who is that Director ? 🤯
“Nag Ashwin or Krish Jagarlamudi”pic.twitter.com/krJLB176mu
சமீபத்தில் சிறகடிக்க சீரியல் நடிகையின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியில் சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்யப் பட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்த நிகழ்வுகள் திரைத்துறையின் மேல் பெரும் நெகட்டிவான அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது ஷாலின் பாண்டே இப்படி கூறியுள்ளது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது





















