Sayyeshaa Weight Loss: பிரசவத்திற்கு பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய சாயிஷா: காரணம் இது தானாம்!
ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா குழந்தை பெற்றெடுப்புக்கு பிறகு மீண்டும் தனது பழைய உருவத்திற்கு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாக சாயிஷா வெளியிட்டுள்ள பதிவில், “ குழந்தை பிறந்த பிறகு உடல் எடையை குறைப்பது ஒன்று அவ்வளவு எளிதில்லை. எப்படியிருந்தாலும், நீங்கள் தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும். அதை தவிர்க்க முடியாது. இதுதான் உங்கள் உடலில் அதிகமான எடையை குறைக்க உதவும். இறுதிக்கட்டத்தில் சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிக்க கூடாது. ஒவ்வொரு பெண்ணும் அவரவர் வழியில் அழகானவர்களே.
ஒல்லியாக இருப்பது நல்லது. காரணம் என்னவென்றால், அது நம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பில் இருந்து நமது உள்ளுறுப்புகளை அது விடுவிக்கிறது. ஆரோக்கியமாக இருப்பதுதான் டார்க்கெட். அதற்கு நேரம் தேவைப்படும். என்ன இருந்தாலும் நாங்கள் பிரபலங்கள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டாம். ஒவ்வொருவரும் தன் உடலின் அளவிலும், ஆரோக்கியத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றனர். நான் பகிர்ந்துள்ள இந்தப் படம் உடற்பயிற்சி என்பது என்னுடைய வாழ்கை முறை என்பதை காட்டுவதற்காகவே.. இது என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.
View this post on Instagram
முன்னதாக, தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் அறிமுகமான நடிகை சாயிஷா ஆர்யாவுடன் கஜினிகாந்த், காப்பான், டெடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதனிடையே இவரும் ஆர்யாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘ஆரியானா’ என்று வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பல பிரபலங்கள் தங்களை வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில்தான் குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் தனது பழைய உருவத்திற்கு மாறியிருக்கிறார் நடிகை சாயிஷா. தற்போது மீண்டும் அவர் படங்களில் கமிட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

