Sanam Shetty: "உங்களுக்கு தகுதி இருக்கா?” - வினோதினி, சனம் ஷெட்டி இடையே மோதல் - வெளியான வீடியோ!
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான வினோதினி வைத்யநாதனிடம் பத்திரிக்கையாலர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர்.

கரூர் விஷயம் பற்றி நடிகை வினோதினி வைத்யநாதன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்கள் ஒர்த் இல்லை
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான வினோதினி வைத்யநாதனிடம் பத்திரிக்கையாலர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர். அதாவது, நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் சமூகத்தில் நிலவும் அவலங்கள் குறித்து நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக அத்தகைய வீடியோக்கள் குறைந்து விட்டதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “இந்த மக்கள் அதற்கு ஒர்த் இல்லை என முடிவு செய்து விட்டேன். உண்மையாக அதைத்தான் நினைக்கிறேன். உதாரணமாக கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பறிபோனது. இதனை நான் எந்த கட்சி சார்பாகவும் பேசவில்லை. உறவுகளை இழந்த அந்த 41 குடும்பத்தினரும் அந்த விஷயத்தை மறந்துவிட்டு செல்கிறார்கள். அவர்களுக்காக நாம் ஏன் பேச வேண்டும் என ரொம்ப விரக்தியாக உள்ளது” என தெரிவித்தார்.
இப்போதான் பார்த்தேன். நல்ல பதிவு. 👌தொடரட்டும் உங்கள் சேவை. https://t.co/omofZfRW7H
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) December 5, 2025
சனம் ஷெட்டி பதிலடி
இந்த வீடியோவை குறிப்பிட்டு பேசியுள்ள நடிகை சனம் ஷெட்டி, கரூர் சம்பவத்தில் இவ்வளவு பாதிக்கப்பட்ட மக்களின் வலியை இப்படி கேவலப்படுத்துகிறீர்களே?, உங்களுக்கு மனசாட்சி, கருணை ஏதாவது இருக்கிறதா?. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க நீங்க போனீர்களா?, நேரில் போய் பேசி இருக்கிறீர்களா?, என்ன பிரச்சனை என கேட்டீர்களா?, எதுவும் தெரியாமல் புரியாமல் பேசுகிறார்.
இப்போது தவெக தலைவர் விஜய்யை இந்த விஷயத்தில் கைது செய்ய பலவிதமான பொய் பித்தலாட்டங்கள் பண்ணியும் முடியவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடு தான் இது. இன்று (நேற்று) நம்முடைய இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவின் நினைவு நாள். இப்போது கூட அவர் மறைந்து 10 ஆண்டுகள் கடந்தும் கூட அவரைப்போல ஒரு இரும்பு மனது கொண்ட பெண் அரசியல்வாதி ஏன் இல்லை என்ற கேள்வி எனக்கும் மக்களுக்கும் உள்ளது.
ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் எந்த அளவில் பிரச்சினைகளை சந்தித்தாலும் மக்களை கைவிட்டு விடமாட்டேன் என இருந்த ஜெயலலிதா எங்கே, மக்களுக்கு நடக்கிற எல்லா பிரச்சினைகளுக்கும் மக்கள் தான் காரணம் அப்படிப்பட்ட மக்களை பற்றி பேச அவங்கள் ஒர்த் இல்லை என சொல்லும் இவங்க எங்கே?” என கேட்டு வினோதினி வைத்தியநாதனை கடுமையாக சாத்தியுள்ளார்.
மேலும், “மேடம் முதலில் நீங்கள் யார், உங்கள் ஒர்த் என்ன, நான் நேரடியாக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து இருக்கிறேன். உங்களை மாதிரி நான் அரசியல்வாதி கிடையாது. பெரிய கட்சி பின்னணி கிடையாது. ஆனால் அவர்களுடைய வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாதிக்கப்பட்ட மக்களே இந்த விஷயத்தில் விஜய் மீது தவறில்லை என கூறுகிறார்கள். இது உங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் அப்படிப்பட்ட மக்கள் தகுதி இல்லை என சொல்கிறீர்கள்.
அவர்களுடைய வலியும் தகுதி இல்லை என கூறுகிறீர்கள். சூப்பர்! நல்ல வேளை ராஜினாமா செய்து விட்டீர்கள். வேலை இல்லை என்றால் ஜம்முனு வீட்டில் இருங்கள். ஒர்த் இல்லாத மக்களுக்கு எதற்காக நீங்கள் அவஸ்தைப்பட்டு சேவை செய்ய வேண்டும்?, எங்களுக்கு உங்கள் சேவை தேவை இல்லை. பக்கத்தில் இரண்டு பேர் உட்கார்ந்து கைதட்டுகிறார்கள். அவர்கள் சிம்பிளி வேஸ்ட்” எனக் கூறியுள்ளார்
இதற்கு பதில் அளித்துள்ள வினோதினி வைத்தியநாதன், ”இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன் நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் சேவை” என பதிலடி கொடுத்துள்ளார்





















