”சூர்யாவுக்காகத்தான் காலேஜ் போனேன்... அவ்வளவு இஷ்டம்“ - நடிகை சமந்தா கல்லூரி சுவாரஸ்யம்!
"அப்போ யாரவாது வந்து என்கிட்ட நீ சூர்யாவோடு நடிப்பியானு கேட்டிருந்தா...சத்தியமா நம்பியிருக்க மாட்டேன்.. நான் மட்டுமல்ல என்கூட இருந்த யாருமே நம்பியிருக்க மாட்டாங்க"
சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் என்பது நமக்கு தெரியும். தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, நாக சைத்தன்யாவுடனான விவாகரத்திற்கு பிறகு ஹாலிவுட், பாலிவுட் என தனது கெரியரில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். சூர்யா, விஜய் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த சமந்தா தனது பள்ளி , கல்லூரி காலங்களில் நடிகர் சூர்யாவுடைய தீவிர ரசிகையாக இருந்திருக்கிறார். இது குறித்து புரமோஷன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் சமந்தா.
View this post on Instagram
அதில்”எனக்கு சின்ன வயசுல சூர்யாதான் பிடிக்கும். எங்க வீட்டுல தமிழ் நிறைய பேசமாட்டாங்க. இங்லீஸ்தான் பேசுவாங்க. இப்படியான சூழல்ல நான் முதன் முதலா 11 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் தமிழ் படம் பார்த்தேன். அது காக்க காக்க.. அதுக்கு பிறகுதான் நிறைய தமிழ் படங்கள் , பழைய படங்கள் படிக்க ஆரமித்தேன். நான் கல்லூரி எல்லாம் ஸ்டெல்லா மேரிஸ்ல படிச்சேன். அப்போ எங்களோட கலைநிகழ்ச்சிக்கு சூர்யா வந்திருந்தாரு. பொதுவாகவே நாங்க கலை நிகழ்ச்சிகள்னாலே கல்லூரிக்கு போகமாட்டோம். ஆனால் அன்னைக்கு மட்டும் முதல் வரிசையில அமர்ந்து சூர்யானு கத்திட்டு இருந்தோம்.
View this post on Instagram
அப்போ யாரவாது வந்து என்கிட்ட நீ சூர்யாவோடு நடிப்பியானு கேட்டிருந்தா...சத்தியமா நம்பியிருக்க மாட்டேன்.. நான் மட்டுமல்ல என்கூட இருந்த யாருமே நம்பியிருக்க மாட்டாங்க. அஞ்சான் படத்தை முதன் முதலா பார்க்கும் பொழுது அதில் இடம்பெற்ற பேங்க்..பேங்க் பாடல்தான் பார்த்தேன். சூர்யா போல யாரும் இப்படி ஒரு லுக்கை மெயிண்டைன் பண்ணியிருக்க மாட்டாங்க.சூர்யாவோட கார்ல நிறைய குழந்தைகள் பொம்மை இருக்கும் “என தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். சமந்தா சூர்யாவுடன் அஞ்சான், 24 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.