மேலும் அறிய

Samantha: இட்லி, தோசை இல்ல.. சாயர்கிராட்: உடல் ஆரோக்கியத்துக்காக சமந்தா உண்ணும் முட்டைகோஸ் ரெசிபி!

ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வரும் சமந்தா எடுத்துக் கொள்ளும் காலை உணவு என்ன தெரியுமா?

முட்டைகோஸை வைத்து செய்யப்படும் ’சாயர்க்ராட்’ (Sauerkraut) என்கிற ஐரோப்பிய உணவு வகையை தனது காலை உணவாக எடுத்துக் கொள்கிறார் சமந்தா.

சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா.  திரைப்படங்களில்  நடிப்பதில் இருந்து  இடைவெளி எடுத்துக் கொள்வதாக அவர் கடந்த ஆண்டு  அறிவித்தார்.  ஆன்மீகத் தலங்கள், உலக நாடுகளில் சுற்றுலா, சிகிச்சை, உடற்பயிற்சி என இந்த ஓராண்டுகாலம் சமந்தா தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். பாலிவுட்டில் அவர்  நடித்துள்ள 'சிட்டடெல்' தொடர் விரைவில் அமேசான் பிரைமில் மே அல்லது ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டோடு சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

மையோசிட்டிஸ் என்னும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இப்படியான நிலையில் முன்னதாக மையோசிடிஸ் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் சமந்தா பேசியிருந்தார்.

மேலும் தனது முன்னாள் கணவர் நாகசைத்யாவுடனான மணமுறிவு காலம் தனக்கு மிகுந்த சவாலானதாக இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் தனது காலை உணவு குறித்தும் அதன் மருத்துவப் பயன்களை குறித்தும் சமந்தா பேசியுள்ளார். ”ஏன் நீங்க இட்லி தோசை எல்லாம் சாப்பிட மாட்டீர்களா?’ என்று ரசிகர்கள் இந்த வீடியோவில் கமெண்ட் செய்ய தற்போது தனது காலை உணவு பற்றிய முழு விபரத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சார்க்ராட் (Sauerkraut)

View this post on Instagram
 
A post shared by Pinkvilla South (@pinkvillasouth)

முட்டை கோஸை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் சாயர்க்ராட் என்கிற ஐரோப்பிய உணவை சமந்தா தனது காலை உணவாக எடுத்துக் கொள்கிறார். உணவு செரிமானத்திற்கு தேவையான ப்ரோ பையோட்டிக் மற்றும் ப்ரீ பையோட்டிக் ஆகிய இருவகை பாக்டீரியாக்களும் இந்த உணவில் இருக்கின்றன.

நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லவும், நச்சுத் தன்மைகளை அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் ப்ரோ பயாட்டிக் உதவுகின்றன. அதே நேரத்தில் நாம் சாப்பிடும் உணவை நொதிக்கச் செய்து அதில் இருந்து ஊட்டச் சத்துக்களை எடுத்துக் கொள்ளவும் இந்த உணவு உதவியாக இருப்பதாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இட்லி மற்றும் தோசை போன்ற உணவுகளை சமைக்கும்போது இந்த அத்தியாவசிய பாக்டீரியாக்களின் தன்மை குறைந்துவிடுவதால் தான் இந்த உணவை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget