மேலும் அறிய
Actress Rohini: ”சும்மா வந்துட்டு போனா மட்டும் பத்தாது” - பிரதமர் மோடியை சீண்டிய நடிகை ரோகிணி
Actress Rohini: ”பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தான் விஜயம் செய்கிறார். இப்படி வந்தாலாவது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார் போல" நடிகை ரோகிணி
![Actress Rohini: ”சும்மா வந்துட்டு போனா மட்டும் பத்தாது” - பிரதமர் மோடியை சீண்டிய நடிகை ரோகிணி Actress Rohini command on pm modi tamilnadu visit Actress Rohini: ”சும்மா வந்துட்டு போனா மட்டும் பத்தாது” - பிரதமர் மோடியை சீண்டிய நடிகை ரோகிணி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/9cd719503053e8ec31ab534ea1623d951706449639024102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரோகிணி, பிரதமர் மோடி
Actress Rohini: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து போனா மட்டும் பத்தாது, மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்த பிரதமர் மோடி:
கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அப்போது சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த 2 நாட்களில் திருச்சி மற்றும் ராமேஸ்வரம் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தததன் மூலம் அவர் 22 தீர்த்தங்களில் நீராடியுள்ளார். பிரதமர் மோடியின் தமிழக பயணம் தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியாகவா? என்ற கேள்வி எழுந்தது.
ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது எதிர்மறை விமர்சனங்கள் எழுப்பப்படும். அந்த வகையிலும் இந்த முறை பிரதமர் வருகைக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் பிரதமரின் தமிழக வருகை குறித்து நடிகை ரோகிணி விமர்சித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோகிணி, பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு தான் விஜயம் செய்கிறார். இப்படி வந்தாலாவது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார் போல.
சும்மா வந்து பார்த்து விட்டு போனால் மட்டும் பத்தாது. மாநிலத்துக்கு தேவையானதை செய்தால் நன்றாக இருக்கும்” என பேசியுள்ளார். ரோகிணியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ரோகிணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரோகிணி, தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார். தற்போதும் சில படங்களில் நடித்து வரும் ரோகிணி, சீரியல்களிலும் பணியாற்றி வருகிறார். மறைந்த ரகுவரனை திருமணம் செய்து கொண்ட ரோகிணிக்கு ஒரு மகன் உள்ளார்.
மேலும் படிக்க: Ajith Kumar: "தமிழரின் உபசரிப்பே தனிதான்" அஜர்பைஜானில் இந்திய தூதரை நேரில் சந்தித்த அஜித்குமார்!
மேலும் படிக்க:
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion