சினிமாவில் இருந்து ஓய்வு ?.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா
இந்தியில் ராஷ்மிகா மந்தானா விக்க கெளஷல் இணைந்து நடித்துள்ள வரலாற்றுத் திரைப்படம் சாவா. இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் தனது ரிடையர்மெண்ட் பற்றி ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார்

ராஷ்மிகா மந்தனா
கன்னட திரையுலகில் அறிமுகமாகி தமிழ் , தெலுங்கு இந்தி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் புஷ்பா , இந்தியில் அனிமல் என அடுத்தடுத்து ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டன. தற்போது இந்தியில் மராத்திய அரசர் சிவாஜியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் வரலாற்று திரைப்படம் சாவா படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது . வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சாவா படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் சினிமாவில் இருந்து விலகுவதை குறித்து ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
சினிமாவில் இருந்து ஓய்வு பற்றி ராஷ்மிகா மந்தனா
சிவாஜி சாவந்த் எழுதிய மராத்திய நாவலை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. லக்ஷ்மன் உடேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். மராத்திய மன்னர் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் மற்றும் முகலாயர்களுக்கு இடையிலான போரை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. சம்பாஜி மன்னரின் மனைவி ஏஸுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் " தென் இந்தியாவைச் சேர்ந்த என்னைப் போன்ற ஒரு பெண்ணிற்கு மகாராணி ஏஸுபாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது என்பது ஒரு பெரும் பாக்கியம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது நான் ரொம்ப அதிர்ச்சி அடைந்தேன். இந்த மாபெரும் மனிதர்களின் கதைகள் மட்டும்தான் எனக்கு தெரியும் அதை கடந்து அவர்களைப் போல் நடிப்பதற்கு எனக்கு எந்த விதமான ரெஃபரன்ஸும் இல்லை. அதனால் இயக்குநரை நான் ரொம்பவும் நம்பினேன். இந்த வாய்ப்பை என் வாழ்க்கைக்கும் நான் மறக்க மாட்டேன். இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பிறகு நான் சந்தோஷமா ரிடையர் ஆவேன்." என ராஷ்மிகா தெரிவித்துள்ளார்
I'm happy and content enough to retire after #Chhaava - #Rashmika pic.twitter.com/BOoKpoXMvx
— BuzZ Basket (@theBuzZBasket) January 23, 2025





















