22 ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் இன்றும் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா.
தமிழ் சினிமா மட்டுமின்றி பல மொழிகளில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு படத்திற்கு ஹீரோயினாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
ஆனால், சினிமாவிலிருந்து விலகிக்கொள்ள த்ரிஷா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் கட்சி தொடங்கிய காரணத்தினால், விஜய் ‘தளபதி 69’ படத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார்.
தற்போது த்ரிஷாவும் சினிமாவிலிருந்து விலகுவதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என த்ரிஷா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டால் தான் தெரியும்.