Rashmika Mandanna : "நான் வாட்டர் பேபி" : தண்ணீரை காதலிக்கும் ராஷ்மிகா.. வைரல் வீடியோ
நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தெலுங்கு சினிமாவில், 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தத்தில் தன் சிறப்பான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் மூலம் நேரடியாக தமிழில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, ஹிட் படமான புஷ்பா படம் மூலம் இந்திய திரையுலம் முழுவதும் பிரபலமானார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்' (Animal) படத்தில் தான் தற்போது ராஷ்மிகா இணைந்துள்ளார். தொடர்ந்து, நடிகர் விஜய்யின் 66வது படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான பூஜை விழாவில் நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா இருந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலானது.
இந்தசூழலில், நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், நான் வாட்டர் பேபி என்றும், ஐ லைக் பாத் இன் ஸ்விம்மிங் டைம் என்று சொல்லும் காட்சிகள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது.
அதேபோல், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர். எவ்வளவு ஆர்வம் என்றால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றாலே அறிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு தான் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் குவித்து வைத்திருக்கிறார். இந்த வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகும்.
View this post on Instagram
முன்னதாக, தன் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா " இந்த போட்டோ உங்கள் பலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த ஸ்டோரி, உங்களின் ஃபிட்னஸ் பயணத்தில் மிக முக்கியமான கோலாக இருக்க வேண்டியது கன்சிஸ்டென்சி. இந்த கன்சிஸ்டென்சி உடன், உங்களின் வொர்க் அவுட், டயட், பிசியோ சார்ந்த பயிற்சிகளும் அடங்கும்” என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்