மேலும் அறிய

Rayane Mithun : அம்மா ராதிகா, பாட்டி ஆகியோர் பற்றி சீக்ரெட் சொன்ன ரேயான் மிதுன்.. ஒரு நெகிழ்ச்சி போஸ்ட்..

"என் மகளுக்கு என் அம்மாவின் பெயரை வைக்க நான் விரும்புவேன் என எனக்கு எப்போதுமே தெரியும். ஏனென்றால் என் அம்மாவை விட  சிறந்தவர்கள் யாரும் இல்லை" - ரேயான்

தமிழ் சினிமாவின் உறுதியான நடிகைகளுள் ஒருவரும் ராதாரவியின் மகளுமான ராதிகாவின் மூத்த மகள் ரேயான்.

ராதிகா மகள் ரேயான்

நடிப்பு பின்புலத்தைக் கொண்டிருந்தாலும், தன் அம்மா ராதிகா சிறந்த நடிகை, தயாரிப்பாளர் என சினிமா மற்றும் சீரியலில் கலக்கி வந்தாலும், இவரது மகள் ரேயான் குழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்துவிட்டு அதன் பின் சினிமா பக்கமே ஒதுங்கவில்லை. 

வெளிநாட்டுக்குச் சென்று தன் படிப்பை முடித்த ரேயான், கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுவைத் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்தத் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையும் பிறந்த நிலையில்,  தன் பெண் குழந்தைக்கு தன் அம்மா மீதான பேரன்பைக் காண்பிக்கும் வகையில், ராத்யா எனப் பெயரிட்டிருந்தார்.

இன்ஸ்டாவில் வாழ்த்து

இந்நிலையில், நேற்று மகளிர் தினத்துக்கு தன் அம்மாவைக் குறிப்பிட்டு இவர் பகிர்ந்த பதிவு இணையத்தில் வரவேற்பைப் பெற்றது.

அதில், “எனக்கு தெரிந்த வலிமையானவர்கள்- ராதிகா, பாட்டி கீதா மற்றும் ராத்யா. என் மகளுக்கு என் அம்மாவின் பெயரை வைக்க நான் விரும்புவேன் என எனக்கு எப்போதுமே தெரியும். ஏனென்றால் என் அம்மாவை விட  சிறந்தவர்கள் யாரும் இல்லை.

இந்த மூன்று அழகிகளும் வேறு வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் மிகவும் ஒத்த பண்புகளை உடையவர்கள். போராளிகள், அற்புதங்கள், உறுதியாக மனமுடையவர்கள், ஜாலியானவர்கள், நம்பிக்கையூட்டுபவர்கள் மற்றும் அன்பு நிறைந்தவர்கள்.

ராத்யா என் அம்மா,  பாட்டி இருவரையும் எனக்கு மிகவும் நினைவுபடுத்துகிறார், அவர்களைப் போல ராத்யா 50 சதவீதம் இருந்துவிட்டாலே நான் என் வேலையை சிறப்பாக செய்ததாக அர்த்தம்.

கிறிஸ்டினா யாங் சொல்வது போல் “யாரும் தடுக்க முடியாதவராக இருங்கள். இயற்கையின் சக்தியாக இருங்கள். இங்குள்ள யாரையும் விட சிறப்பாக இருங்கள், யார் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள். மகளிர் தின வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Littlest Love - Baby+mom (@littlestlove.rayanemithun)

தன் அம்மா ராதிகாவைப் போலவே உறுதியான பெண்ணாக வலம் வரும் ரேயான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி லைக்ஸ் அள்ளி வருகிறார்.  

மேலும் படிக்க: Archana Gautam: பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... சிக்கும் பிரியங்கா காந்தியின் உதவியாளர்...பாலிவுட்டில் பரபரப்பு

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
Embed widget