கொஞ்சம் லேட்... ஆனாலும் ஹாட்... பூஜா ஹெக்டே பதிவிட்ட விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்!
Pooja Hegde: வெளிநாட்டில் இருந்தாலும் சதூர்த்தி கொண்டாடி, அதற்காக பிரத்யேக ஆடைகள் அணிந்து, சிறப்பாக அதை பதிவேற்றம் செய்த பூஜாவை, பூஜைக்கு வந்த பூஜாவே என அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
தென்னிந்தியாவில் அதிக ஊதியம் பெறும் நடிகை என்கிற பெயரோடு முன்னணியில் இருக்கிறார் பூஜா ஹெக்டே. முகமூடி படம் மூலம் அறிமுகமாகி, தமிழில் பெரிய ஸ்கோப் கிடைக்காததால், தெலுங்கு பக்கம் ஒதுங்கிய பூஜா, இன்று தென்னிந்திய மொழிகளில் சக்கை போடு போடும் நாயகி.
குறிப்பாக,தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகர்களுடன் நடித்து வரும் பூஜா, சமீபத்தில் தளபதி விஜய் உடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களிலும், பூஜாவின் நடனம் பெரிதாக பேசப்பட்டது. போதாக்குறைக்கு பூஜாவிற்கு பெரிய ரசிகர் கூட்டமும் தமிழில் எகிறியது.
30 வயதை கடந்து, சினிமாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பூஜா, நேற்று முன்தினம், தனது சினிமா வாழ்க்கையின் 10 ஆண்டுகளை கடந்தார். இந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா, தமிழில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் என்று கூறலாம்.
View this post on Instagram
சமீபத்தில் வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்ட பூஜா, அங்கு பல்வேறு போட்டோக்களை பதிவிட்டு, தன் ஃபாலோவர்ஸை திணறடித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, விஐபி.,கள் பிரபலங்கள் பலரும் தங்களின் சதூர்த்தி கொண்டாட்டங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த சமயத்தில் பதிவிட்டால், தனது பதிவு கவனிக்கப்படாமல் போகும் என நினைத்தாரோ என்னமோ, கொஞ்சம் தாமதமாக தன் விநாயகர் சதூர்த்தி பதிவை சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பூஜா.
View this post on Instagram
வெளிநாட்டில் இருந்தாலும் சதூர்த்தி கொண்டாடி, அதற்காக பிரத்யேக ஆடைகள் அணிந்து, சிறப்பாக அதை பதிவேற்றம் செய்த பூஜாவை, பூஜைக்கு வந்த பூஜாவே என அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.