இது தீண்டாமை இல்லையா... கை கொடுத்த நபரிடம் நித்யா மேனன் செயலால் பரபரப்பு
காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டில் நடிகை நித்யா மேனனிடம் கை கொடுத்த வந்தபரிடம் தனக்கு காய்ச்சல் என்று அவர் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
காதலிக்க நேரமில்லை
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி , நித்யா மேனன் நடித்துள்ள படம் காதலிக்க நேரமில்லை. ரெட் ஜயண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி நடித்து முன்னதாக வெளியான பிரதர் , இறைவன் , சைரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் காதலிக்க நேரமில்லை படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்கள் முன்பு சென்னையில் நடைபெற்றது.
பிடிக்காத துறை திரைத்துறைதான்
நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன் " எனக்கு பிடிக்காத துறை திரைத்துறை தான். வேறு ஏதெனும் ஒரு துறையில் வாய்ப்பு கிடைத்தால் இப்போதும் கூட விலகிவிடுவேன். ஒரு சாதாரண வாழ்க்கையே வாழ விரும்புகிறேன். எனக்கு பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும் அதனால் பைலட்டாக விரும்பினேன். ஒரு நடிகையாக இருப்பது என்றால் சுதந்திரத்தை மறந்துவிட வேண்டும். ஒரு பார்க்கில் கூட சென்று நடக்க முடியாது. சில சமயம் இதெல்லாம் நமக்கு தேவையா என்று தோன்றும். சத்தமே இல்லாமல் எங்கேயாவது போய்விடலாமென்று தோன்றும் அப்போது தான் தேசிய விருது கிடைத்தது. " என பேசியிருந்தார்.
தீண்டாமையை கடைபிடித்தாரா நித்யா மேனன்
காதலிக்க நேரமில்லை இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நித்யா மேனன் இயக்குநர் மிஸ்கின் , நடிகர் வினய் உள்ளிட்ட பல்வேறு நபர்களுடன் நெருங்கி பழகினார். மேலும் இயக்குநர் மிஸ்கினுக்கு அவர் முத்தமும் கொடுத்தார். அதே நேரம் நிகழ்ச்சியில் நித்யா மேனனிடம் ஒருவர் கைகொடுக்க முயற்சி செய்தார். நித்யா மேனன் தனக்கு காய்ச்சல் இருப்பதாக கூற அவரிடம் கை கொடுப்பதை தவிர்த்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலர் இது தீண்டாமை என்று நித்யா மேனனை விமர்சித்து வருகிறார்கள்.
Never Expected this From her 💔🤡pic.twitter.com/LTagqhCkM6
— Arun Vijay (@AVinthehousee) January 9, 2025