மேலும் அறிய

Nazriya Nazim: பச்சிளம் குழந்தை கண்கள்.. வசீகரத்தின் மறுபெயர்.. அசைக்க முடியாத க்ரஷ்.. நஸ்ரியா பிறந்தநாள்!

வெகு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நஸ்ரியா நஸிம் பிறந்தநாள் இன்று!

நஸ்ரியா நஸிம்

Nazriya Nazim: பச்சிளம் குழந்தை கண்கள்.. வசீகரத்தின் மறுபெயர்.. அசைக்க முடியாத க்ரஷ்.. நஸ்ரியா பிறந்தநாள்!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நஸ்ரியா நஸிம். மிக அழகான பாவனைகள், இப்போது தான் தூக்கத்தில் இருந்து விளித்த குழந்தையின் பச்சிளம் கண்கள். சிறிய மேலிதழ்களின் குறையை மறைக்க கீழ் இதழ்கள் சற்று எடுப்பாக காட்டும் அழகை ஒவ்வொரு இளைஞரும் ரகசியமாக ரசிக்கத் தொடங்கினார்கள்.

இதுதான் காரணம்  என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு வசீகரம் அவரது பையோ டேட்டாவை இளைஞர்களை கூகிள் செய்ய வைத்தது. புரியாத மலையாளப் படங்களைப் பார்க்க வைத்தது. புது செல்ஃபோன் வாங்கியதும் அதில் வால்பேப்பராக அவரது புகைப்படத்தை வைக்கத் தூண்டியது. ஒரு நடிகைக்கு காதல் கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகியிருந்தன. நஸ்ரியா அதை மீண்டும் தொடங்கி வைத்தார். யார் எழுதினாரோ இல்லையோ நான் எழுதினேன். 

குழந்தை நட்சத்திரம்

Nazriya Nazim: பச்சிளம் குழந்தை கண்கள்.. வசீகரத்தின் மறுபெயர்.. அசைக்க முடியாத க்ரஷ்.. நஸ்ரியா பிறந்தநாள்!

தனது சிறிய வயதில் இருந்தே பாட்டு நிகழ்ச்சிகளில் க்யூட்டாக தலை ஆட்டிக் கொண்டு பாடுவது. தன்னம்பிக்கையோடு பேசுவது என தொலைக்காட்சிகளில் வருகை தருவதற்கு பழகிவிட்டிருந்தார் நஸ்ரியா. அதன் காரணத்திலோ என்னவோ  நடிப்பு அவருக்கு காற்றில் ஆடும் கூந்தல் போல் எளிமையாக வந்தது.

 இன்னும் சிலர் மட்டும் அவரது ரசிகராக மாறாமல் மிச்சம் இருந்தார்கள் அவர்களை வாரி சுருட்டி தனது லேடிபர்ட் சைக்கிள் கூடையில் போடுவது மாதிரி ராஜா ராணி படத்தில் அசத்தினார். ப்ரதர், ப்ரதர்.. என்று ஆர்யாவைக் கூப்பிடும் போதெல்லாம், ஏனோ இங்கு அத்தனை ஆண்களுக்கு கொஞ்சம் வலிக்கதான் செய்தது. மறுபக்கம் மலையாளத்தில் ஷலாலா மொபைல்ஸ், ஓம் ஷாந்தி ஓஷானா, பெங்களூர் டேஸ்  என அடுத்தடுத்த ஹிட் படங்கள் கொடுத்து அசத்தினார்.

வெகு குறுகிய காலத்திலேயே பிரபலமான நஸ்ரியா, தனுஷ் நடித்த நையாண்டி படத்தில் நடித்தார். இந்தப் படம் போதுமான வெற்றிபெறவில்லை. வெற்றி பெற்றிருந்தாலும் அவர் திருமணம் செய்து கொள்வதில் இருந்து அவரது முடிவை யாராலும் மாத்தியிருக்க முடியாது. நல்ல அடைமழை திடீரென்று வந்து குடையை விரிப்பதற்குள் நின்றுவிட்டதைப் போல் ஒரு அமைதி ரசிகர்களின் மனதில் கவிந்தது. யாருக்கு இருந்ததோ இல்லையோ எனக்கு இருந்தது.

Nazriya Nazim: பச்சிளம் குழந்தை கண்கள்.. வசீகரத்தின் மறுபெயர்.. அசைக்க முடியாத க்ரஷ்.. நஸ்ரியா பிறந்தநாள்!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த க்ரஷ்கள் வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நஸ்ரியா ஒருவர் இருந்திருந்தால் ஒரு பத்து ஆண்டுகளுக்கு தமிழில் அசைக்க முடியாத ஒரு இடத்தை கொடுத்த தமிழ் ரசிகர்கள் தயாராக இருந்தார்கள். 

இன்னுமும் ஒன்னும் காலம் கெட்டுவிடவில்லை. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க, அதில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நஸ்ரியா. ரசிகர்களே உங்கள் மனதில் தூசுப்படிந்து கிடக்கும் அந்தக் கோயிலை கொஞ்சம் சுத்தம் செய்து வையுங்கள். மீண்டும் தரிசனம் தர வருகிறார் நஸ்ரியா. உங்கள் கோயிலில் இடம் இருக்கிறதோ இல்லையோ, என் கோயில் எப்போதும் காலியாக தான் இருக்கிறது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்

DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?

Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்

IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!

ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
Trump: மோடிக்கு பாராட்டு..! இந்தியாவிற்கு ஆப்பு - கலங்கும் வணிகர்கள், வேலையை காட்டும் ட்ரம்ப்
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
DHONI: தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
Indian Defence: அம்மாடியோவ்..! ரூ.2.09 லட்சம் கோடி, 156 போர் ஹெலிகாப்டர்கள் - இந்தியா அதிரடி, அலறும் பாகிஸ்தான்
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
IPL CSK vs RCB :17 ஆண்டு சோகத்திற்கு முடிவு! சென்னைக்கே தோல்வி தந்த ஆர்சிபி! படிதார் பாய்ஸ் செம்ம!
MI Vs GT: பும்ரா கம்பேக்? இன்று குஜராத்தை வீழ்த்துமா மும்பை? ஹர்திக் படை வேலையை காட்டுமா?

IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?

Virat Kohli: ஹெல்மட்டை பதம் பார்த்த பதிரானா! பழி வாங்கிய விராட் கோலி - எப்படி?

Baakiyalakshmi serial Actress: அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கீங்களா? ரசிகரின் கேள்விக்கு உண்மையை உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

Embed widget