மேலும் அறிய

Actress Navya Nair: ”இறந்த வீட்டில் கூட செல்ஃபி கேட்கிறார்கள்” - வருத்தப்பட்ட நடிகை நவ்யா நாயர்

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் ரசிகர்களை கண்டால் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை நவ்யா நாயர் தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ரசிகர்களை கவர்ந்த நவ்யா நாயர்

கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த நடிகை நவ்யா நாயர் 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் அவருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து மலையாளத்தில்  மழத்துள்ளிக்கிலுக்கம், நந்தனம், கல்யாண ராமன், சதுரங்கம், கிராமஃபோன், சேதுராம ஐயர் சி.பி.ஐ , அம்மாகிளிக்கூடு, பட்டணத்தில் சுந்தரன், சர்கார் தாதா, பாண்டிப்படை, கிச்சாமணி எம்பிஏ என 30க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ளார். 

இதனிடையே தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகியே தீயே படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தமிழில் நவ்யா நாயருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. இதனையடுத்து பாசகிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். அதேசமயம், கடந்த 13 ஆண்டுகளில் 5 படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்தார். ரசிகர்கள் அவர் மீண்டும் திரையில் ஹீரோயினாக தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். 

ரீ - எண்ட்ரீ கொடுக்கும் நவ்யா நாயர்

இதனிடையே ஜானகி ஜானே படத்தின் மூலம் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் ஜானகி என்ற கேரக்டரில்  கடந்த காலங்களில்  நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் ஏற்பட்ட பயத்துடன் வாழ்கிறார். திருமண வாழ்க்கைக்குள் செல்லும் அவருக்கும் ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரீ-எண்ட்ரீ குறித்து நவ்யா நாயர் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் எனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளது. எதிர்பார்ப்புக்கும் மேலாக ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு உள்ளது. நான் நிறைய கதைகள் கேட்டாலும் அவற்றில் இருந்து எனக்கேற்ற சில கதைகளை மட்டுமே தேர்வு செய்கிறேன்.

அதேபோல் கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், நான் நடித்த படப்பிடிப்பு தளத்தில் கூட நிறைய பெண்கள் இருந்தனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் கேரவன் வசதி செய்து கொடுப்பதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது  முன்னெல்லாம் ஹீரோயின், ஹீரோவுக்கு மட்டுமே கேரவன் கொடுத்த நிலையில், தற்போது எல்லோருக்கும் அந்த வசதி செய்து கொடுத்திருப்பது சந்தோஷமாக உள்ளது" என தெரிவித்துள்ளார். 

அதேசமயம், ரசிகர்களின் செல்ஃபி தொந்தரவு பற்றியும் நவ்யா நாயர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த செல்ஃபி எடுக்கும் செயல் எல்லை மீறுவதாக உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போதும் கூட செல்பி எடுக்க வருகிறார்கள். ஒருவர் இறந்தபோது அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். ஆனால் ஒரு துக்க நிகழ்வு என்று கூட பாராமல் அங்கேயும் செல்பி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது என நவ்யா நாயர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget