’இளமையின் ரகசியம் என்ன?’ - டாப் சீக்ரெட்டை போட்டு உடைத்த நடிகை நதியா
எப்பொழுதும் இளமையாக இருக்க என்ன காரணம் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகை நதியா பதிலளித்தார்.
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் எல்.ஜி.எம். திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இப்படம் கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகவும், தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட படமாக வெளியாகவுள்ளது. படத்தின் நடிகைகள் நதியா, இவானா மற்றும் நடிகர் ஹரிஸ் கல்யாண் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய நடிகர் ஹரிஸ் கல்யாண், “கோவை வந்தது சந்தோஷம். இப்படத்தின் இயக்குநர் இங்கு வர முடியவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. தோனி ஒவ்வொரிடமும் படத்தை பார்த்துவிட்டு தனியாக பேசினார். அவர் குடும்பத்துடன் படத்தை பார்த்து ரசித்தார். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. படத்திற்கு தேவைப்பட்டால், காட்சிக்கு தேவைப்பட்டால் தான் அது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பேசவில்லை. தோனியின் முதல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அனைத்து தரப்பு மக்களும் பார்க்ககூடிய ஒரு படமாக வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
நடிகை நதியா பேசும்போது, ”மணிப்பூர் சம்பவம். எது பண்ணினாலும் முன்பாகவே யோசிக்க வேண்டும். அனைவருக்கும் மரியாதை தர வேண்டும். இதே நிகழ்வு நிகழ்வு நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். ஹரிஸ் யோட அம்மாவாக நடித்துள்ளேன். படம் முழுவதும் ஜாலியாக எடுக்கப்பட்டுள்ளது. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் அம்மாவை தனியாக காட்டினார்கள். எனக்கு தகுந்த கதை வந்தால் நிச்சயம் நடிப்பேன். தெலுங்கில் அதிக படங்கள் வந்தது. எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம் தோனி படம் எடுக்கிறார் என கேள்விப்பட்ட போது, அதிர்ச்சி அடைந்தேன். இந்த பட குழுவினருடன் என்னை பார்க்கும் போது பாட்டி போன்று பீல் ஆகிறது. ஆம் சீனியர் நடிகையாக இருப்பதால் அப்படி உணர்கிறேன்.
சென்னைக்கும் தோனிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் தான் தமிழில் படம் தயாரித்துள்ளார் சப் டைட்டிலுடன் தான் படத்தை தோனி பார்த்தார். தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் திரையிடப்படுகிறது. ஆக்ஷன் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. ஆனால் அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன். கமல் சார் உடன் படம் நடிக்க வாய்ப்பு உள்ளது. அவரும் நடிக்கிறார் நானும் நடிக்கிறேன்” எனத் தெரிவித்தார். எப்பொழுதும் இளமையாக இருக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு, ”உங்க அன்பு தான் காரணம். எல்லாம் சாப்பிட வேண்டும், முதல் மாடி இருந்தாலும் நடந்தே செல்லுங்கள். அதுதான் என் டயட்” என பதிலளித்தார்.
நடிகை இவானா பேசுகையில், “தெலுங்கில் ஒரு படம் நடிக்க உள்ளேன். இன்ஸ்டாவில் வாவ் என்ற ரீல் வைரல் ஆகி உள்ளது. பூவே பூச்சுடுவா படத்தை இரண்டு முறை பார்த்து விட்டு தான் நதியா அவர்களை பார்க்க சென்றேன். படம் சூட்டிங் போது என்னை களாய்ப்பார்கள். அதற்கு நதியா மேம் கவுண்டர் ஒன்னு கொடுத்துருவாங்க. எல்லாரும் அமைதியாக மாறிடுவாங்க. படம் நன்றாக வந்துள்ளது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவிற்கு இருக்கும்” என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/